ரக்ஷா பந்தன்
எந்த நாட்டிலும் இல்லாத சிறப்பான சில பண்டிகைகள் இந்தியாவில் உண்டு அதில் ஒன்று ரக்ச பந்தன்
ரக்ச என்றால் காப்பாற்றுதல் என்று பொருள், ரட்சித்தல் என்பதெல்லாம் இந்த பொருள். பந்தன் என்றால் உறவு என்ற பொருளில் வரும், மொத்தத்தில் பாதுகாக்கும் உறவு எனபொருள்
இது மகாபாரத காலத்திலே தொடங்கிற்று, பகவான் கண்ணனின் கையில் வழிந்த ரத்த காயத்தை தன் சேலையினை கிழித்து பாஞ்சாலி கட்டியதாகவும் , அதனால் மனம் இறங்கிய கண்ணன் அவளை தங்கையாக பாவித்து எக்காலமும் உன்னை காப்பேன் என உறுதி வழங்கியதாகவும் அதுதான் முதல் ரக்ச பந்தன் என அழைக்கபடுகின்றது
பொதுவாக கையில் காப்போ, நூலோ கட்டி சில விஷயங்களை உறுதிபடுத்துதல் இந்திய மரபு. இன்றும் ஆலயங்களில் வழங்கபடும் புனித நூல், அந்த தெய்வம் நம்மோடு இருக்கின்றது என்ற நம்பிக்கையினை கொடுத்து கொண்டே இருக்கும் என்பது உறுதியான நம்பிக்கை
இது இந்திய மரபு, நிச்சயம் இந்திய மரபு
சிலர் சொல்வது போல இது வட இந்திய பண்டிகை என்பதோ, தமிழருக்கு தொடர்பில்லா பண்டிகை என்பது சரியானதல்ல
தமிழக கோவில் கொடைகளில் காப்பு கயிறு கட்டுவார்கள் அல்லவா அப்படி ஒரு பாரம்பரியம்
இது வரலாறு முழுக்க காணபடுகின்றது, அலெக்ஸாண்டர் போரசுடன் மோதும் பொழுது, பொரஸுக்கு ரக்ச பந்தன் கயிறு அனுப்பினாள் அலெக்ஸாண்டர் மனைவி ரக்சனா, அதாவது போரஸை அண்ணாக பாவித்து தன் மாங்கல்யத்தை காக்க வேண்டினாள் என்பது செவிவழி செய்தி
போரில் அலெக்ஸாண்டர் கொல்லபடவில்லை என்பதும் கவனிக்கதக்கது
இதே கலாச்சாரம் மொகலாயர் அரசு வரை நீடித்திருக்கின்றது, பல இடங்களில் உதவி வேண்டும் ராணியர் பக்கத்து அரசனுக்கு ராக்கி கயிறு அனுப்பிய காட்சிகள் எல்லாம் உண்டு
இன்று இந்துக்களின் அந்த ரக்ச பந்தன் விழா
கண்ணனுக்கு பாஞ்சாலி கயிறு கட்டினாளா இல்லையா என்பதல்ல விஷயம், தாயினையும் மனைவியினையும் தவிர மற்ற பெண்கள் உனக்கு சகோதரிகள் என்ற பெரும் தத்துவம் அதில் அடங்கி இருக்கின்றது
கயிறு கட்டியதன் மூலம் அண்ணன்கள் மத்தியில் வாழ்கின்றோம் என்ற பெரும் பாதுகாப்பு உணர்வு அக்கால பெண்களுக்கு இருந்திருக்கின்றது
தனக்கு கயிறு கட்டிவிட்டாள், அவள் தங்கை அவளை கண்போல் காக்க வேண்டுமென்ற கடப்பாடு அந்த ஆண்கள் மேல் சுமத்தபடுகின்றது
அந்த ஆணுக்கு அவள் தங்கை ஆகின்றாள், அவளின் அண்ணனாக அவனுக்கு பொறுப்பு கூடுகின்றது, அவளை காக்கும் கடப்பாட்டினை அக்கயிறு நினைவூட்டிகொண்டே இருக்கின்றது
எவ்வளவு அருமையான விழா?, எவ்வளவு அருமையான சமூக ஏற்பாடுகள்
இப்படி ஒரு விழா எந்த வேறு நாட்டிலாவது உண்டா என்றால் நிச்சயம் இல்லை.
இந்துக்களின் சிந்தனை அக்காலத்திலே அவ்வளவு உயர்ந்ததாய் பெருந்தன்மைமிக்கதாய் இருந்திருக்கின்றது
அருமை பாரதம் தாய் , மனைவி தவிர எல்லா பெண்களும் உன் சகோதரிகளே என உலகிற்கு சொன்ன ஒப்பற்ற தத்துவத்தின் வடிவம் இவ்விழா
இதனை பெருமையொடும் கர்வத்தொடும் கொண்டாடலாம்
இந்த கலாச்சாரங்களை எல்லாம் முறையாக பின்பற்றினாலே சமூகம் மிக அமைதியாக இருக்கும்.
இம்மாதிரி பெரும் தத்துவங்களை கொண்ட இந்தியாதான் , சில விரும்பதகாத சம்பவங்களால் அடிக்கடி உலகளவில் சர்ச்சையாகின்றது என்பதுதான் சோகம்
காரண்ம் இந்நாட்டின் உயர்ந்த தத்துவங்களும், மிக உன்னதமான பாரம்பரிய கலாச்சார விழாக்களும் அவற்றின் அர்த்தமும் புரியாத தலைமுறை உருவாகிற்று என்பதை தவிர சொல்ல ஒன்றுமில்லை
இவற்றை எல்லாம் மீட்டெடுத்தால் வருங்காலத்தில் மிக அமைதியான, பெண்கள் பாதுகாப்புமிக்க சமூகத்தை உருவாக்க முடியும்
இந்துக்களின் பெரும் ஞான தத்துவம் இவ்விழா, சந்தேகமில்லை. இந்தியாவின் மிக பெரும் மாண்பினை உலகிற்கு சொல்லும் விழா
இதில் எவனாவது பகுத்தறிவு பேசினால் அவன் ஆட்டோ சங்கர் வகையறா என்பதன்றி வேறு முடிவுக்கு வரமுடியாது
மத விழாக்கள் என்பது வெறியூட்டுபவை அல்ல, ஆழ சிந்தித்தால் அது சமூகத்தை நல்ல விதமாக பிணைக்கபட்ட சங்கிலிகள், ரக்ச பந்தன் அப்படி ஒரு விழா
பகுத்தறிவு என்ற பெயரில் இந்த சங்கிலியினை உடைத்தால் எதற்கும் கட்டுபடாத , அடங்காபிடாரியான தலைமுறையே உருவாகும்
அப்படி ஆகிவிடாமல் நல்ல தலைமுறையினை உருவாக்க பழங்கால நல்ல பாரம்பரியங்களை பின்பற்றுதலோ அவற்றை துணைக்கு அழைத்தலோ தவறே ஆகாது, தாராளமாக பின்பற்றலாம்
ரக்ச பந்தன் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள், நிச்சயம் மத எல்லையினை தாண்டி எல்லோரும் கொண்டாட வேண்டிய விழா
தலைவி குஷ்பு சகோதரி அல்ல, அல்லவே அல்ல
அவர் தெய்வ வரிசை என்பதால் அவர் நமக்கோ, சங்கம் அவருக்கோ ராக்கி கட்ட முடியாது என்பதை சங்கம் உலகிற்கு தெரிவிக்கின்றது