ரசிகர்களின் உற்சாகம் எல்லை மீறி சென்றாயிற்று
அசுரன் படத்தின் வெற்றியில் தனுஷுக்கும் இருக்கும் ரசிகர்களின் உற்சாகம் எல்லை மீறி சென்றாயிற்று, வழக்கமாக சிம்பு ரசிகர்களிடம் வம்பு இழுப்பார்கள்
இப்பொழுதெல்லாம் சிம்பு ரசிகர்களே சிம்புவினை கலாய்ப்பதால் அப்பக்கம் செல்லவில்லை மாறாக தனுஷுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையான சிறு உரசல் காலங்களை நினைவு கூர்ந்து அப்பக்கம் சென்றாயிற்று
“தனுஷ் பிறவி நடிகண்டா.. இடையில வந்தவனெல்லாம் எங்க வீட்டு பிள்ளை ஆக முடியாதுடா” என ஒரே அழிச்சாட்டியம்
சிவகார்த்திகேயனின் படத்தை தனுஷ் படம் ஓட விரட்டிவிட்டது என்னமோ உண்மைதான். வாழ்வின் வலியினை சொல்லும் தரமான படத்துக்கும் வலிய வைக்கபடும் காமெடி கற்பனை காட்சிக்குமான வித்தியாசம் அதுதான்
ஆக இனி என்னாகும்?
விரைவில் தலித்திய படம் ஒன்றில் சிவகார்த்திகேயன் வந்து புரட்சி விடுதலை வசனம் பேசலாம், அவருக்கு செட் ஆகாத அதை கண்டு தியேட்டரில் தனுஷ் ரசிகர்கள் சிரித்து சிரித்து மகிழலாம்