ரஜினிகாந்துக்கு எப்பொழுதுமே ஒரு சென்டிமென்ட் உண்டு
ரஜினிகாந்துக்கு எப்பொழுதுமே ஒரு சென்டிமென்ட் உண்டு, 1980களில் இருந்து வரும் சென்டிமென்ட் அது
ஆம் அவரின் படத்தின் தொடக்கபாடலை எஸ்.பி பாடினால் படம் ஹிட் ஆகும் இன்னொருவர் பாடினால் படம் படுத்துவிடும் என்பது
அதை ஏகபட்ட படங்கள் நிரூபித்தன, பாபா அதை சரியாக சொன்னது, கபாலியும் காலாவும் சூடம் ஏற்றி சத்தியம் செய்தன
மறுபடி எஸ்பி பாடிய பேட்டை ஹிட் ஆனது, இதோ தர்பாரிலும் எஸ்பி குரல் வந்தாயிற்று, பாடலை கேட்கும் பொழுதே படம் ஹிட் என தெரிகின்றது
ரஜினி நிச்சயம் அதிசயம் ஆனால் அவருக்கு 40 வருடமாக பாடும் எஸ்பி பாலசுப்பிரமணியம் அதைவிட அதிசயம்
ஆச்சரியமாக ரஜினி குரலில் மாறுபாடு இருந்தாலும் எஸ்பி குரல் அப்படியே இருக்கின்றது
எஸ்பி குரலுக்கு வயதே ஏறவில்லை என்பதுதான் விசித்திரம்..
அக்குரல் ரஜினியினை இன்னும் சினிமாவில் இளமையாக வைத்திருக்கும் மாயவித்தையினை அழகாக செய்கின்றது
அதே 1980களின் குரல் அப்படியே இருப்பதும் ரஜினிக்கு பொருந்துவதும் அவருக்கு வரம்..
தர்பார் பாடலின் வரியான “இன்னைக்கும் ராஜா நான் கேட்டுபாரடா..” எனும் அந்த அழகான வரி எஸ்பிக்காக எழுதபட்டிருக்கின்றது
ஆம் அவர் என்றைக்கும் ராஜா..
