ரஜினியின் காமெடிகள்
ரஜினியின் காமெடி ஒரு பக்கம் இருக்கட்டும், நடிகர் விஜயின் தந்தை சந்திரசேகரின் அரசியல் ஆசை என்னாயிற்றோ தெரியவில்லை , முன்பெல்ல்லாம் “உன்னால் முடியும்” என்ற கோஷங்களோடு கூட்டம் போட்ட அவரை இப்பொழுது காணவே இல்லை
ஜெயா மறைந்த செய்தி இன்னும் தெரியாமல் இருக்காது, ஆக அது காரணமாக இருக்க முடியாது
ஒருவேளை பைரவா போல இன்னும் கொஞ்சம் படங்களை விட்டு தமிழர்களை வதைத்தால் போதும் என்ற முடிவிற்கு இப்போதைக்கு வந்துவிட்டார் போல…
சினிமா வதை முடிந்துதான் விஜயின் அரசியல் வதை தமிழகத்தை ஆட்டும் என்பதுதான் இப்போதுள்ள ஆறுதல்
ரஜினியின் எந்திரன் 2.0 படம் எப்பொழுது வருமோ தெரியாது, ஆனால் இனி வரும்பொழுது ஆண்டவன் வந்து சொன்னால்தான் தியேட்டரில் சென்று பார்ப்போம் என்றொரு கூட்டம் முடிவு செய்திருக்கின்றது
அந்த கூட்டத்தில் இனி இணைந்துவிடலாம், நம்மிடமும் ஆண்டவன் வந்து சொல்லட்டும், பார்க்க செல்லலாம்
இல்லாவிட்டால் அந்த ஆண்டவனே வந்து தடுத்தாலும் தமிழ்ராக்கர்ஸில் தான் எந்திரன் 2.0 படத்தினை பார்க்கவேண்டும்..
தமிழகத்திற்கு தேவை ஆக்டர் அல்ல டாக்டர் : ராமதாஸ்
கலைஞர் நலமாக இருந்தால் பதில் எப்படி வரும் தெரியுமா?
“ஆம், அன்று அண்ணாமலை பல்கலை கழகம் முதல், சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பல்கலை கழகம் வரை பல பல்கலைகழகங்கள் என் தொண்டிற்காக டாக்டர் பட்டம் வழங்கின, தமிழகத்திற்கு உழைத்து ஏராளமான பட்டம் வாங்கிய நான் தான் அந்த டாக்டர்,
அதனைத்தான் ராமதாஸ் சொல்லியிருக்கின்றார்”
தமிழகத்தில் அரசியல் கெட்டு போய்விட்டது : பொன்.ராதாகிருஸ்ணன்
பாஜக எல்லாம் தமிழக ஆட்சியினை கைபற்றிவிடலாம் என கனவு காணும் காலத்தில் இது பொன்னாரின் மிக சரியான வார்த்தை
அரசியல் கெட்டுபோகாவிட்டால் எச்.ராசா எல்லாம் பேசிகொண்டிருப்பாரா?
மிஸ்டர் பொன்னார், கெட்டுவிட்ட தமிழக அரசியலில் சிலர் பிரபாகரன் படத்தோடு அலைகின்றார்களாம், ஒரு சர்வதேச தீவிரவாதி படத்திற்கு தமிழகத்தில் அனுமதியா?
சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என இந்த அரசினை டிஸ்மிஸ் செய்தால் என்ன? அதனை நீங்கள் ஏன் வலியுறுத்த கூடாது