ரஜினியை முதல்வர் என அழைக்க வேண்டுமாம்
இங்கு ஆயிரம் சிக்கல் இருக்கும்பொழுது அவர் இமயமலை செல்வாராம்,
வந்தததும் தூத்துகுடி விவகாரம் கூட பேசமாட்டாராம் மாறாக திரைபட துரை ஸ்ட்ரைக் நிறுத்த விஷாலை எச்சரிப்பாராம் காரணம் அன்னாரின் காலா படம்
இந்த நபரை முதல்வர் என அழைக்க வேண்டுமாம்
இவர் முதல்வர் என்றால் பழனிச்சாமி என்ன கோட்டைக்கு வாட்ச்மேனா?
சட்டத்தை அவமதிக்கின்றார் என்ற வகையிலும், மதிப்பான முதல்வர் பதவியினை கொச்சைபடுத்துகின்றார் என்ற பிரிவிலும் இந்த தமிழருவி மணியனை போட்டு சாத்த வேண்டும்
இனி எங்காவது இந்த கோஷ்டி “ரஜினி தமிழக முதல்வர்” என கிளம்பினால் பதிலுக்கு சங்கம் “இந்திய பிரதமர் குஷ்பு” என பிரச்சாரம் செய்யும்
ரஜினி 2 கழகங்களையும் தூக்கி எறியும் மிகப்பெரிய சக்தியாக இருப்பார் – தமிழருவி மணியன்
அவர் கழகங்களை தூக்கி எறிகின்றாரா? இல்லை டெப்பாசிட் போனவுடன் இவரை தூக்கி எறிந்துவிட்டு இமயமலைக்கு ஓடுவாரா என்பது விரைவில் தெரியும்
அம்மா லதா, நீர் வாடகை கூட கொடுக்காமல் சேர்த்த சொத்துகளுக்கு இந்த மணியன் மூலம் சனி பிடிக்க போகின்றது ஜாக்கிரதை