ரஜினி அரசியலுக்கு ஆண்டவன் சொன்னால்தான் வருவார்

“ரஜினியிடம் எந்த பிரச்சினைக்குமே தீர்வு இல்லை, அமிதாப் பச்சன் போன்றே ரஜினி மண்டையிலும் ஒன்றுமில்லை..” : மார்கண்டேய கட்ஜூ

கட்ஜூ ஏன் இப்படி சொன்னார்?, ஏன் அமிதாப்பச்சனை மட்டும் சொல்லவேண்டும்?

எம்ஜிஆர், ஜெயா, அமிதாப், போன்றே ரஜினி மண்டையிலும் ஒன்றுமில்லை என சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்

ஜெயாவினை பற்றி கட்ஜூ நிச்சயம் அப்படி சொல்லமாட்டார் என்பது நமக்கு தெரியும், கட்ஜின் மலரும் நினைவுகள் அப்படி

ஆனால் ராமசந்திரனை சேர்த்திருக்கலாம்..


என்னிடம் அரசியல் பற்றி ஏதும் பேசவேண்டாம், செய்தியாளர்களிடம் ரஜினி கோரிக்கை

ஆமாம், அவர் அரசியலுக்கு ஆண்டவன் சொன்னால்தான் வருவார், அப்படி செய்தியாளர்களும் ஆண்டவன் கேள்வி கேட்க சொன்னால்தான் கேட்க வேண்டும்

அது என்ன அந்த ஆண்டவன்?? , ரஜினியினை நடிக்க சொல்லியிருக்கின்றான், கோடி கோடியாக சம்பளம் வாங்க சொல்லியிருக்கின்றான், ஒரு பைசா குறைக்க சொல்லவில்லை

அழகு பெண்களுடன் ஆட சொல்லியிருக்கின்றான், இவருக்கு என்ன வயதானாலும் கதாநாயகிகள் மிக இளம்வயதினராக இருந்தே ஆகவேண்டும் என்று கட்டளை வேறு போட்டு தொலைத்துவிட்டான்

முன்பு சிகரெட்டும் தண்ணியும் அடித்து ஊத சொல்லியிருக்கின்றான்

ஏதும் பட நஷ்டம் என்றாலும் விநியோகிஸ்தர்களுக்கு ஒரு பைசா கொடுக்காதே என்றும் சொல்லிருக்கின்றான்..

ஆனால் அரசியலுக்கு வருவது பற்றி மட்டும் அவரிடம் சொல்லவே மாட்டேன் என்கின்றான்.

ஆனால் அடுத்த படம் வரும் முன் தவறாமல் இப்படி சில சந்திப்புகளை நடத்து , இப்படி ஆண்டவன் சொன்னால்தான் அரசியலுக்கு வருவேன் என சொல் என சொல்லிவிடுகின்றான்

ஆக செய்தியாளர்களே ஆண்டவன் உங்களிடம் வந்து அவரிடம் அரசியல் கேள்வி கேட்க சொல்லும் வரைக்கும் கேட்காதீர்கள்

(ஆனால் வீட்டுக்கு வந்த மோடியிடம் மட்டும் அரசியல் பேசுகின்றார் ரஜினி என்கின்றார்கள், ஒருவேளை அந்த ஆண்டவன் மோடியாக இருக்கலாமோ???..)