ரஜினி அரசியலுக்கு வருவது என்பது
புராணத்தில் ஒரு காட்சி உண்டு, தசரதனுக்கும் பரசுராமனுக்கும் முட்டிகொள்ளும். பரசுராமன் தசரதனை தொலைத்துவிடுவது என வருவான்
பரசுராமனின் கோபம் பொல்லாதது என உணர்ந்த தசரதன் விசுவாசமித்திரரிடம் சரணடைகின்றான் அவர் ஒரு யோசனை சொல்கின்றான்
“மன்னா பரசுராமனை வெல்ல நம்மால் முடியாது ஆனால் அவன் தர்மத்துக்கு கட்டுபடுவான், ஆம் மணகோலத்தில் நிற்பவர்களை கொல்ல கூடாது என்பது தர்மம், ஆகையால் அவன் வரும் பொழுது நீ மணகோலத்தில் நில் அவன் கொல்லமாட்டான்”
இதனால் நாளுக்கொரு திருமணம் செய்து மணகோலத்தில் நின்றாராம் தசரதன், அனுதினமும் அவரை வந்து பார்த்தான் பரசுராமன், தசரதனின் மனைவிகள் கணக்கு ஆயிரகணக்கில் சென்றது,
வெறுத்து போன பரசுராமன் தன் அவதாரத்தையே முடித்துவிட்டு கிளம்பினான், தசரதன் தப்பினான்
இப்படியாக இந்த ரஜினி என்பவரை அரசியலுக்கு இழுக்க கோடாரியோடு அலைகின்றது டெல்லி, வீட்டில் இருந்தால் மனைவி இன்னொரு கோடாரி
இவர்களிடம் இருந்து தப்ப இந்த படம் முடிந்தபின் அரசியல் இந்தபடம் முடிந்தபின் அரசியல் என ஓடிகொண்டே இருக்கின்றார் ரஜினி
ரஜினி அரசியலுக்கு வருவது என்பது தசரதனை பரசுராமன் பழிவாங்க காத்திருந்த கதைதான் வேறொன்றுமில்லை
