ரஜினி கட்சியின் முத்திரை பாபா முத்திரையா?

Image may contain: 1 person, close-up

என்னது ரஜினி கட்சியின் முத்திரை பாபா படத்த்து முத்திரையா? அப்படித்தான் செய்திகள் வருகின்றன‌

அப்படி இருந்தால் சகுனமே சரியில்லை என்பதே முடிவு, பாபா படம் பட்ட பாடு கொஞ்சம் அல்ல‌

அது இருக்கட்டும், ரஜினிக்கு உழைக்க ரசிகர்கள் இருக்கலாம் ஆனால் இவர்கள் என் கட்சியின் அடையாளங்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இவர்கள்தான் ஆளபோகின்றார்கள் என எந்த நல்லவர்களை அடையாளம் காட்டபோகின்றார் ரஜினி?

அவர் முன் இருக்கும் பெரும் கேள்வியும், தமிழகம் அவரிடம் எதிர்பார்ப்பதும் அதுதான்

இந்த தமிழகம் இன்னும் மொத்த அயோக்கியர்களால் நிரம்பிவிடவில்லை. இன்னமும் நேர்மையான, நியாமானவர்கள் இருக்கின்றார்கள். கக்கன் காமராஜர் அளவு இல்லை எனினும் அவர்கள் வரிசையில் வரும் நல்லகண்ணு போல இன்னும் பலர் உண்டு

அவர்கள் மேல் ஊடக வெளிச்சமும் , பொல்லா அரசியல் வாதிகளின் ஆதரவும் இல்லையே அன்றி அம்மாதிரி நேர்மையாளர்கள் இன்னமும் இருக்கின்றார்கள்

அவர்களில் சிறந்தவர்களை, கல்வியில் நிர்வாகத்தில் காவல்துறையில் சிறந்தவர்களை அடையாளம் கண்டு முன்னிறுத்தினால் ஓரளவு கவனத்தை பெறுவார் ரஜினி.

அவரே பதவிக்கோ, புகழுக்கோ, பணத்திற்கு ஆசைபடவில்லை என சொல்லிவிட்டபின் இம்மாதிரி ஆட்களை தேடி முன்னிறுத்துவதே அவருக்கு சால சிறந்தது அவர் கட்சியின் எதிர்காலத்திற்கும் சிறந்தது

தமிழகத்திற்கு மிக மிக உகந்தது. அப்படிபட்ட காரியங்களில் ரஜினி இறங்கினால் வாழ்த்தலாம்

பாபா படத்தில் ஒரு நல்லவரை கண்டெடுப்பார் அல்லவா? அப்படி ஒரு நேர்மையாளனை கண்டெடுத்து ஆட்சியினை ஒப்படைக்கட்டும் வரவேற்கலாம், மொத்த உலகே வரவேற்கும்

அதுதான் மகா முக்கியமே தவிர , இம்மாதிரி முத்திரைகள் அல்ல‌