ரஜினி செல்பி ஷாட்ஸ்…..

Image may contain: 2 people, people standing

அய்யப்பசாமிக்கு இருக்குற விரதம் 40 நாளில் முடிஞ்சிரும் சார், ஆனா உங்களுக்கு இருக்கிறோம் பாருங்க காவல், ஆயுளே முடிஞ்சிரும் போல இருக்கு சார்….


ராகவேந்திரா கல்யாண மண்டபம் ப்யூர் வெஜிடேரியன். அதனால உங்களுக்கு கிடா வெட்டி கறிசோறு போட முடியல @ ரஜினி

அதுவா சார் முக்கியம்? , நீங்க அரசியலுக்கு வராம எங்களால் வோட்டு போட முடியல, அதுதான் சார் விஷயம்


கடவுள் மற்றும் தாய் தந்தையின் காலில் மட்டும்தான் விழ வேண்டும் – ரஜினிகாந்த் பேச்சு

தாங்கள் ஒரு காலத்தில் பாலசந்தரின் காலில் விழுந்தீரே அய்யா, அதெல்லாம் ஏன் மறந்து தொலைத்தீர்?


மதுரை என்றாலே வீரம் – ரஜினி.

இது என்ன திடீர்னு?

அன்புசெழியன் கிட்ட தலைவரும் சிக்கி இருந்திருப்பாரோ?


ஆங்கிலம் தெரியாததால் குருமூர்த்தியின் வார்த்தை தவறாக புரிந்து கொள்ளபட்டுள்ளது @ அன்புமணி

யாருக்கு பாஸ் சொல்றீங்க? காடுவெட்டி குருவுக்கா? ஆனாலும் அவரை இப்படி கலாய்க்ககூடாது சார்


 ரஜினியை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும் – பெ.மணியரசன்

எப்படி புறக்கணிக்க வேண்டும்? கரடியாய் கத்தினாலும் உங்களை யாரும் திரும்பிபார்க்காமல் புறக்கணித்தார்களே அப்படியா?

ஆக எங்களை போல ரஜினியினை புறக்கணியுங்கள் தமிழர்களே என கதறுங்கள், சரியாக இருக்கும்


பல்கேரியாவில் மணப்பெண்களை சந்தைக்கு அழைத்து வந்து ஏலத்தில் விடும் விநோத பழக்கம் நடைபெற்று வருகிறது.

இங்கு மட்டும் என்ன வாழ்கின்றது? மணமகனை ஏலத்தில் எடுக்கும் சந்தை ரகசியமாக நடைபெறுகின்றது அவ்வளவுதான்