ரஜினி தன் வார்ததைகளை திருத்தி கொள்வது நல்லது

ரஜினி பாஜகவாக இருக்க வேண்டிய அவசியமில்லை, காவி கட்டி இமயமலைக்கு செல்வதெல்லாம் அவரின் சொந்த விருப்பம்ஆனால் இஸ்லாமும் கிறிஸ்தவமும் தோன்றுமுன்னே அந்த தெய்வீக குறளை எழுதிய வள்ளுவன் இந்து முனி அல்லாமல் யார்?அதை ஏன் அவர் சொல்லவில்லை, ஆன்மீகத்தில் கரைந்தவர் என்றவகையில் அவருக்கு அது நன்றாக தெரியும், ஆனால் திமுகவினையும் கலாநிதி மாறனையும் பகைத்து தன் படத்தை கெடுக்க அவர் விரும்பவில்லை என்பது மட்டும் தெரிகின்றதுமவுனமாக அதை கடந்திருக்கலாம் மாறாக வள்ளுவன் சிக்கமாட்டார் என சொன்னது சரியல்ல. வள்ளுவன் ஒரு இந்துவாக இருக்கும் பொழுது இன்னும் சிக்க என்ன வேண்டி இருக்கின்றது?கவிதாலாயா நிறுவணத்தின் ஐகானே வள்ளுவன் சிலை, அக்கம்பெனி தொடக்கத்திலெல்லாம் வள்ளுவன் வந்து அகரமுதல எழுத்தெல்லாம் ஒலித்துவிட்டே படம் தொடங்கும்கவிதாலாயா நிறுவணத்தால் வளர்ந்த ரஜினி இப்படி பேசுவது கொஞ்சமும் நியாயமும் மனசாட்சியுமில்லா விஷயம்இதுவே கன்னடத்தில் அந்த பசவய்யா ஒரு இந்து அல்ல என அவரால் சொல்லிவிட முடியுமா?”தன்னெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்” என்பது வள்ளுவன் வாக்கு..நல்ல ஆன்மீகவாதி பொய்யுரைப்பானாகில் அதன் விளைவுகள் சரியிராது, ரஜினி தன் வார்ததைகளை திருத்தி கொள்வது நல்லது