ரஜினி, ஸ்டாலின், சசி, நாஞ்சில், டோனி..
ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து
என்னது? ஒரே தெருவில் இருக்கும் சசிகலாவினை சந்தித்து வாழ்த்து தெரிவிக்காமல் வேளச்சேரி ஸ்டாலினுக்கு வாழ்த்தா?
என்ன படம் அது? எந்திரன் 2.0 தானே?
படம் சிக்கலின்றி வெளிவருவது இனி பூர்வ ஜென்ம புண்ணியம்.
கலைஞர் கருணாநிதியின் முதல் மகன் மு.க முத்துவின் தூரத்து உறவினர்தான் சசிகலா
ஆக கலைஞரும் சசிகலாவும் சொந்தங்கள் என புது கதை வருகின்றது
புதுகதை இருக்கட்டும், பழம் கதை என்ன?
திமுக பிதாமகன் அண்ணாவின் உடன்பிறப்பு தம்பி கலைஞர்
அண்ணாவின் இதயத்தில் இருந்த கனி எம்ஜிஆர்
ஆக எம்ஜிஆர் கலைஞருக்கு அண்ணன் வழி உறவு
எம்ஜிஆருக்கு ஜெயா அரசியல் வாரிசு, ஜெயாவின் உடன்பிறவா சகோதரி சசிகலா
ஆக சசிகலா கலைஞருக்கு அண்ணன் வழி உறவு
எப்படியோ கலைஞருக்கு மகன் வழியிலும் சசிகலா உறவு, அண்ணன் வழியிலும் சசிகலா உறவு தான் என்பது ஆராய்ச்சியின் முடிவு
கழகம் ஒரு குடும்பம் என அன்றே காரணத்தோடுதான் சொல்லியிருக்கின்றார்கள்.
பொங்கல் அன்று திமுகவில் இணைகின்றார் நாஞ்சில் சம்பத்
“எங்கு சுற்றினாலும் ரங்கனை சேர்..” என ஒரு பழமொழி உண்டு
பொங்கல் அன்றா? சரிதான்
“சிறீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி..” என மகாநதி பாடல் முழங்க கோபாலபுர ரங்கனின் பாதம் சேர்ந்துவிடலாம்.
கேப்டன் பதவியிலிருந்து விலகினார் டோனி
அடுத்த கேப்டனாக அவரின் கார் டிரைவரைவர் அல்லது பெர்சனல் செகரட்ரியைதான் வைக்க வேண்டும்,
சரி அவர்களுக்கு ஆட தெரியாது என்றாலும் கூடவே இருந்த ரவீந்திர ஜடேஜாவினை கேப்டனாக்குவதுதான் முறை
இது என்ன விசித்திரமாக கோலி அடுத்த கேப்டன்?
நன்றாகவா இருக்கின்றது?