ரஞ்சித் .. திருமா… செல்லூர் ராஜூ

Image may contain: 4 people, people standing

நானும் ரஞ்சித்தும் அரசியல் பேசினால் ரஜினி ஆர்வமாக கவனிப்பார் : காலா ஒளிப்பதிவாளர்

ஆமாம் சே குவாரேவும், பிடல் கேஸ்ட்ரோவும் அரசியல் பேசுகின்றார்கள் அதை மாவோ கவனிக்கின்றார்

3 பிராடுகளும் இன்னும் சம்பளம் எவ்வளவு என்றே வெளியில் சொல்லாது, இதில் அரசியல் பேசுகின்றார்களாம்


தேனி பக்கம் இஸ்லாமியரும் தாழ்த்தபட்டவரும் மோதிகொண்ட இடத்திற்கு சென்றிருக்கின்றார் திருமா

இம்மாதிரி கொடுமைகள் ஒழிய அந்த தலித்மக்கள் புத்தமதத்தை ஏற்க வேண்டும் என்றோ இல்லை வேறு பொன்மொழிகள் ஒன்றையும் உதிர்க்கவில்லை

அடங்க மறு.. அத்து மீறு என்றெல்லாம் முழங்கவில்லை

அம்மாதிரி வசனங்கள் எல்லாம் இந்துக்கள் அல்லது வேறுசாதிகாரர்களிடம் மட்டும்தான் வரும்போல‌

இஸ்லாமியர் என்றால் மட்டும் மத நல்லிணக்கம் வந்துவிடுகின்றது


அம்மா மருந்தகத்தில் இதுவரை 200 கோடிக்கு மருந்தது விற்பனை நடந்திருக்கின்றது : செல்லூர் ராஜூ

ஜெயலலிதாவிற்கு என்ன மருந்து கொடுக்கபட்டது , எத்தனை கோடிக்கு கொடுக்கபட்டது? அல்லது கொடுக்கபடவே இல்லையா? என்பது மட்டும் வெளிவரவே வராது