ரபேலை வாங்க அவசியம் என்ன?

Image may contain: 1 personராணுவத்தில் ரகசியங்கள் என சில விஷயங்கள் உண்டு அது நிச்சயம் காக்கபட வேண்டும், ராணுவ பட்ஜெட் என்றொரு விஷயம் உண்டு ராணுவத்திற்கான செலவு கணக்கு

இதில் ரகசியம் ஏதும் இருக்க முடியாது, இவ்வளவு ராணுவம் கோருகின்றது, இவ்வளவு விஷயங்கள் தேவைபடுகின்றது என்ற பட்ஜெட் அது

 

இதில் விமானம் உட்பட எல்லாவற்றின் விலை இருக்குமே தவிர அதன் ஆற்றல் , எங்கு நிறுத்தபட்டிருக்கின்றது அதில் எவ்வளவு ஆயுதம் ஏற்றபட்டிருக்கின்றது என்ற விஷயமெல்லாம் இருக்காது

ரபேல் விமானம் இந்த வகையில் வருகின்றது, அதன் விலையும் இன்னபிற விஷயங்களையும் (அதன் இதர மேம்பாட்டு செலவுகள்) சொல்ல முடியாது என்பது நிச்சயம் நகைப்புகுரியது

ஆபத்தான அணுவுலையிலை 17 ஆயிரம் கோடி தெரியுமா? மூட முடியாது என்பார்களாம். செயற்கை கோள் செலவினை எழுதி ஊரெல்லாம் காட்டுவாகளாம் , உண்மையில் அதுதான் காக்க வேண்டிய விஷயம்

அதனை சொல்வார்களாம் ஆனால் ரபேல் விமான விலையினை சொல்லமாட்டார்களாம், எவ்வளவு சர்வாதிகாரம்?

ரபேல் ஒன்றும் உலகின் முண்ணணி விமானம் அல்ல, இலங்கை இஸ்ரேலிடமிருந்து வாங்கிய கிபிர் ரகம் போன்றது

இந்திய விமானபடையினை வலுபடுத்தவேண்டுமானால் யூரோ பைட்டர் வாங்கலாம் இல்லை அமெரிக்க விமானங்களுக்கு சவால்விடும் சுகோயினை இன்னும் மேம்படுத்தி வாங்கலாம்

ஆனால் அவ்வளவு பிரயோசனமில்லா ரபேலை வாங்க அவசியம் என்ன?

அதுவும் அதன் இதர பாகங்களை இந்திய அரசின் நிறுவணம் HAL இருக்க அம்பானியின் நிறுவணமே தயாரிக்கும் என அடம்பிடிப்பது ஏன்?

இதுதான் சர்ச்சைகுள்ளான விஷயம், இதனை சொன்னால் நீ மோடியினை விமர்சிக்கின்றாய் பாவி இந்தியன் என கிளம்புகின்றார்கள்

ஒரு விஷயம் ராணுவ நிபுணர்களால் வைக்கபடுவதை எல்லோரும் மறக்கின்றார்கள் அல்லது அவ்விஷயம் கவனம் பெறவில்லை

அதாவது இந்த ரபேல் போன்ற சூப்பர்சானிக் விமானங்களுக்கு எதிர்காலமில்லை, எதிர்காலம் ஆளில்லா டிரோன் வகை விமானங்களில் இருக்கின்றது

வாங்கினால் அம்மாதிரி விமானங்களை வாங்கலாம், கணிணியில் இலக்கை சொல்லிவிட்டால் செயற்கைகோள் வழிகாட்டலில் அட்டகாசமாக இலக்கை தாக்கிவிட்டு திரும்பும் விமானங்கள் அவை, முண்ணணி நாடுகள் எல்லாம் அதில் கவனம் செலுத்த ஆரம்பித்தாயிற்று

இஸ்ரேல் அதனை ராணுவத்திலே சேர்த்தாகிவிட்டது

காங்கிரஸை எதற்கெடுத்தாலும் கரித்து கொட்டும் பாஜக அரசு மறக்கும் பெரும் விஷயம் என்னவென்றால் காங்கிரஸ் ஆட்சியில் இதே ஆளில்லா “தேஜஸ்” விமானத்தை HAL நிறுவணம் தயாரித்து வெற்றிகரமாக சோதித்தது

அதனை இன்னும் திறம்பட வளர்த்து, வேண்டுமானால் வெளிநாட்டு நுட்பங்களை வாங்கி தயாரித்தால் மிக பெரும் பலம் கிடைக்கும்

ஆனால் வருங்கால பலமான டிரோன் விமானங்களை, அதுவும் இந்தியாவிலே தயாரிக்கபட்ட டிரோன் விமாங்களை புறக்கணிப்போம், பல மில்லியன் டாலர் கொடுத்து பிரான்ஸ் சூப்பர்சானிக் விமானம் வாங்குவோம் என்பது எதற்காக?

அம்பானி இதரபாகங்களை செய்வார் என்பதற்காக அன்றி வேறு எதற்குமல்ல‌

மேக் இன் இந்தியா என்றால் டிரோன் விமானங்களை செய்தால் என்ன? அட அது கூட வேண்டாம் ரபேல் விமான பாகங்களை அந்த நிறுவணத்திடம் கொடுத்தால் என்ன?

மாட்டார்கள்

ஆக அம்பானி போன்றோரை வளர்க்க மிக முக்கியமான ராணுவ விவகாரங்களில் இந்த அரசு விளையாடுகின்றது என்பதுதான் தேசபற்று மிக்கோரின் கவலையே அன்றி வேறல்ல‌

இவ்வளவிற்கும் ரபேல் விமானத்தின் உத்தேச‌ விலை ஒன்றும் ரகசியமல்ல, அதன் பறக்கும் வீச்சும் திறனும் ரகசியமல்ல உலகிற்கே தெரிந்தது. இதில் மக்கள் கேட்பது இந்திய அரசு எவ்வளவு கொடுத்தது என்பதுதான்.

அது ராணுவ ரகசியம் என இவர்கள் சொல்வதுதான் நகைச்சுவையின் உச்சகட்டம். இதுவெல்லாம் ரகசியம் என்றால் உலகம் வாய்விட்டு சிரிக்காதா?

அணுவுலை முதல் வான்செயற்கைகோள் வரை விலை இது என ஊரெல்லாம் ஒப்பாரி வைப்பார்களாம், பிரம்மோஸ் ஏவுகனை பட்ஜெட் என ரஷ்யா வெளிப்படையாக சொல்லுமாம்

Image may contain: 1 personஅன்று போபர்ஸின் விலை என்ன, அதன் வீச்சு தூரம் என்ன? அதற்கு இந்தியா கொடுத்த விலை என்ன? என‌ வெளிப்படையாக காங்கிரசார் சொன்னார்கள், ஆனால் ஏய் ராஜிவ்காந்தி கமிஷனை சொன்னாயா என பொங்கி எழுந்தார்கள் எதிர்கட்சியினர்.

இன்று என்ன இந்த ரபேலை என்ன‌ விலைக்கு வாங்கினார்கள் என சொல்லவே தயங்குகின்றார்கள்

ஆக மடியில் கனமிருக்கின்றது, வழியில் இருக்கும் அம்பானி மீதும் பயம் இருக்கின்றது அதனால் அஞ்சுகின்றார்கள் இதற்கு இவர்கள் சொல்லும் விஷயம் ராணுவ ரகசியம்

ஏதாவது அட்டகாசம் செய்வது, மக்கள் எதும் சொன்னால் உனக்கு நாட்டுபற்று இல்லை என்பது. ராணுவ விமானம் வாங்கிய விலையினை கேட்டால் இது ராணுவ ரகசியம் என்பது, இப்படியாக ஒருமாதிரி காமெடி ஆட்சி செய்துகொண்டிருக்கின்றார்கள் பாஜகவினர்

வரவர மோடியினை பார்த்தால் “ஜீன்ஸ்” படத்தில் அப்பாவி நாசர் ஒரு புத்தகத்தை நெஞ்சோடு வைத்தபடி படபடப்பாக பயந்தபடி திரிவார் அல்லவா? அப்படி இருக்கின்றது