ரஷ்யாவும் ஆதரித்துவிட்டது

காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா இந்தியாவினை ஆதரித்துவிட்ட நிலையில் ரஷ்யாவும் ஆதரித்துவிட்டது

மோடி விரைவில் ரஷ்யா செல்ல உள்ள நிலையில் ரஷ்யாவின் சில அறிவிப்புகள் இந்தியாவுக்கு சாதமாக உள்ளது

உலக அரங்கில் யுத்தம் என்றால் அமெரிக்கா பதுங்கும் ஆனால் ரஷ்யா நேருக்கு நேர் வரும்

ஆனால் உலக அரங்கு ராஜதந்திரம் என்றால் அமெரிக்கா நேரடியாக வரும் ரஷ்யா பின்னால் இருந்து ஆடும்

இதனால் காஷ்மீர் விவகாரத்தில் ரஷ்யாவின் நிலை கணிக்கமுடியாதபடி இருந்தது, இப்பொழுது அவர்களும் சிம்லா, லாகூர் ஒப்பந்தபடி அமைதியாக செல்லுங்கள் என சொல்லிவிட்டார்கள்

ஆம் மிக முக்கியமான ஒன்றை தவிர்த்தார்கள் அது இந்தியாவுக்கு அனுகூலம் பாகிஸ்தானுக்கு பெரும் ஏமாற்றம்

ஆம் 1965ல் இந்தியாவின் சாஸ்திரியும் பாகிஸ்தானின் முகமது அய்யூப்கானும் செய்த ஒப்பந்தம் அல்லது அன்றைய சோவியத் யூனியன் முடித்திருந்த பஞ்சாயத்து

அதாவது அன்று காஷ்மீரை முழுக்க கைபற்றும் போரை தொடங்கினார் சாஸ்திரி, இந்தியா வெல்ல வாய்ப்பும் இருந்தது ஆனால் அமெரிக்க தலையீடு மெதுவாக வந்தது இதை தொடர்ந்து ரஷ்யா முந்தியது

ஒருவரையும் இன்றைய உஸ்பெக்கிஸ்தானும் அன்றைய சோவியத் யூனியனின் நகருமான தாஷ்கண்ட் நகருக்கு அழைத்து பேசினார்கள்

அதில் சமாதனமாக செல்லவேண்டும் என்ரார்கள் இன்னும் என்னவெல்லாமோ சொல்லி குழப்பி முடித்தார்கள், காஷ்மீர் பற்றி ஒரு முடிவுக்கு வரமாமே முடித்தார்கள்

முடித்தார்கள் என்பதை விட அமெரிக்க படை அங்கு காலூன்றுவதை ரஷ்யா தடுத்தது, எனினும் முழு காஷ்மீரையும் மீட்கும் முடிவில் இருந்த சாஸ்திரி அங்கேயே மர்மமாக செத்தார்

தாஷ்கண்ட் ஒப்பந்தபடி காஷ்மீர் விவகாரம் இந்தியாவுக்கு அனுகூலமில்லை

ஆனால் இன்றைய ரஷ்யா அது காலாவதியான ஒப்பந்தம் என்பது போல அதை மறந்து இந்தியா பக்கம் வருகின்றது, இது இந்தியாவின் ராஜதந்திர வெற்றி

மாபெரும் வெற்றி

நிச்சயம் ரஷ்யா நினைத்திருந்தால் 1965ல் என்ன பேசினோம் என குழப்பி அடித்திருக்கலாம் ஆனால் செய்யவில்லை

மோடி ரஷ்யா செல்லும் நிலையில் எஸ் 400 சிஸ்டம் விரைவில் ஒப்படைக்கபடும் என சொல்லிவிட்டது ரஷ்யா

ஆனால் இன்னொரு விஷயம் இந்தியாவுக்கு அனுகூலமானது அல்ல, நிச்சயம் அல்ல ஆனால் கிடுக்கிபிடி போட்டு நம் தலையில் கட்டுகின்றார்கள்

ஆம் மிக் 29 ரக விமானங்களை மேம்படுத்தி தருகின்றார்களாம், இது அவசியமே இல்லாதது, பெரும் ஏமாற்று வேலை

ஏற்கனவே மிக் ரக விமானங்கள் விபத்துகுள்ளாகின்றன, இதில் இன்னும் ஏன்?

அவை பழைய விமானங்கள் அவற்றை மேம்படுத்தி தருவார்களாம் எச்.,ஏ.எல் எனப்படும் நம் நிறுவணம் பழைய இயந்திரங்களை பொறுத்துமாம்

இதெல்லாம் சரிவராது

ஆயினும் எஸ்400 வாங்கும் பொழுது இந்த இம்சைகளையும் வாங்கு என கட்டாயபடுத்துகின்றது ரஷ்யா

தன் பழைய காயலான் கடை சரக்கையும் காசாக்க தெரிந்த நாடு அது..

எஸ் 400 விலை அதிகமாயிற்று என நினைத்து கொள்வோம் என தலையில் அடித்துகொண்டு இளம் யானையோடு சாகிடக்கும் அந்த பழைய சிங்கங்களையும் இழுத்துகொண்டு வருகின்றது இந்தியா

ஆயுத விவகாரம் இப்படித்தான்

நம் விமானம் தாங்கி கப்பல் அவர்கள் பழுது பார்க்கின்றார்கள், எஸ் 400 தருகின்றார்கள் எனும் பொழுது இந்த நாசமாய் போன மிக் ரகத்தையும் வாங்கி தொலைக்க வேண்டி இருக்க்கின்றது

எனினும் இன்னும் இருவாரங்களில் ரபேல் வந்துவிடும், விமானபடை பலம்பெறும்

இந்த மிக் 29 வைத்து என்ன செய்யலாம்?

அபிநந்தன் போல ஏதாவது சாகசவிமானி ஆச்சரியங்களை கொடுக்கலாம், வீரனின் பலம் ஆயுதத்தில் மட்டுமல்ல‌

மற்றபடி இவை தானக‌ விழுந்து சிலரை கொல்லாமல் இருந்தால் நல்லது.

தேசம் பல திறமையான விமான பொறியாளர்களை உருவாக்கி பெரும் நிறுவணங்களை ஆய்வுகூடங்களை செய்து நாமே சொந்தவிமானம் செய்யும் வரை இந்த கொடுமைக்கு முடிவில்லை

மோடி இனி ரஷ்யா செல்வார், பாரீசில் தனக்கு ஆங்கிலம் தெரியாது என்றும், படமெடுக்கும் பொழுது தன்னை ஓரத்தில் நிறுத்திய டிரம்பையும் எப்படி பழிவாங்குவார் தெரியுமா?

அதை இனி வரபோகும் படங்களில் பாருங்கள், அதை பார்த்துவிட்டு வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் வரும் பிரகாஷ்ராஜ் போல் டென்ஷ‌னாகி சிரிப்பார் டிரம்ப்