ரஷ்ய உக்ரைன்
ரஷ்ய உக்ரைன் போர் ஒரு விபரீத திருப்பத்தை கொடுத்திருக்கின்றது
இதுவரை பெரிதாக ரஷ்யாவுக்குள் அடிக்காத உக்ரைன், இப்பொழுது சண்டைக்கு தேவையான ரஷ்ய எரிபொருள் இருக்கும் குடோனை ஏவுகனை வீசி தகர்த்திருக்கின்றது, இது பெரும் அதிர்ச்சி
காரணம் ரஷ்யாவின் வான்பாதுகாப்பு பலம் உலகிலே உன்னதனமாது, அதிசிறந்த வான்பாதுகாப்பு சாதனமெல்லாம் அவர்களிடம் உண்டு
ஒரு நாடு ஏற்றுமதிக்கு தரம் குறைந்த ஆயுதமும் தன் சொந்த பாதுகாப்புக்கு மிக பலமான ஆயுதமும் செய்யும் என்பது உலக நியதி, அவ்வகையில் ரஷ்யாவின் வான்பாதுகாப்பு மிகபெரிதாக கருதபட்டது
அதையும் மீறி உக்ரைன் அடித்திருப்பது உலகின் கவனத்தை ஈர்க்கின்றது, ஏற்கனவே ரஷ்ய கப்பல் இப்படிபட்ட வசதிகள் இருந்தும் மூழ்கடிக்கபட்டதை தொடர்ந்து கடும் பாதுகாப்பில் இருக்கும் எண்ணெய் குடோனும் எரிவது ரஷ்யாவுக்கு கடும் பின்னடைவே
இந்நிலையில் ஐரோப்பாவும் அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் ஏகபட்ட ஆயுதமும் பணமும் உக்ரைனுக்கு கொடுத்து கொண்டே இருப்பதை ரஷ்யா வழக்கம் போல் கடுமையாக எதிர்க்கின்றது
இது மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் என அந்நாடு எச்சரிக்கின்றது
காரணம் நேட்டோ ஊடாக உக்ரைனுக்கு கொடுக்கபடுவதெல்லாம் அமெரிக்க மற்றும் ஐரொப்பிய ஆயுதங்களே அந்த சண்டை ஒருவகையில் நேட்டோவுக்கும் ரஷ்யாவுக்குமானது
அவர்களுக்குள்தான் சண்டை என ஆகிவிட்டது, இதை ஒரே முனையின் உக்ரைனில் செய்யாமல் பல முனைகளில் செய்தால் என்ன என ரஷ்யா களங்களை திறந்தால் அதுதான் மூன்றாம் உலகப்போர் வேறு ஒன்றும் இல்லை