ராகுல் காந்தியுடன் குஷ்பூ சந்திப்பு
ராகுல் காந்தியுடன் குஷ்பூ சந்திப்பு, தீவிர அரசியலில் இறங்க திட்டம்
கோடான கோடி ரசிகர்களை கொண்ட குஷ்பூவினை அந்த ராகுல்காந்திதான் வந்து சந்தித்திருக்கவேண்டும். ஆனால் மிக பெருந்தன்மையாக தலைவி அவரை சந்தித்திருக்கின்றார்
இனியும் அந்த ராகுல்காந்தி காலம் தாழ்த்தாமல் தலைவியினை தமிழக காங்கிரஸ் தலைவராக்கி தமிழகத்தில் காங்கிரஸை மறுமலர்ச்சி செய்யும் வழியினை தொடங்கவேண்டும்.
வீணாய் போன காங்கிரசின் கோஷ்டி தலைவர்களின் ஆலோசனையில் ராகுல் அதற்கு தயங்குவாரானால், தமிழக காங்கிரசை பிடித்திருக்கும் ராகு திசைக்கு விடிவே இல்லை
ராகுல் காந்தியே அவருக்கு பதவி கொடுங்கள், தலைவியினை காங்கிரஸ் தலைவராக்குங்கள்.
விரைவில் நடக்க இருக்கும் ஆர்.கே நகர் தொகுதியில் தலைவி தலமையில் காங்கிரஸ் களமிறங்கட்டும், முடிந்தால் அவரை வேட்பாளர் ஆக்குங்கள்
அவரை மட்டும் வேட்பாளர் ஆக்கிவிடுங்கள், எதிர்த்து வெல்வார் யாருமில்லை. காங்கிரஸின் விடிவு அங்கிருந்தே தொடங்கும்