ராகுல் காந்தி என்ன சொன்னார்?

ராகுல் காந்தி என்ன சொன்னார்?, பகவத் கீதையினை, உபநிஷங்களை கவனமாக படிக்கின்றேன், அப்பொழுதுதான் ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்கு பதிலளிக்க முடியும் என சொல்லியிருந்தார்

அவ்வளவுதான், தமிழிசை குதிக்க ஆரம்பித்துவிட்டார்

ராகுல் “இலங்கையில் தமிழர் கொல்லபட்டபோது எங்கே போனார் ஏய்..” என முப்பந்தல் இசக்கி போல ஆட ஆரம்பித்துவிட்டார்

அம்மா தமிழிசை, ராகுலுக்காவது ஒரு காரணம் இருந்தது, அக்குடும்பம் ஒரு தலைவனை பறிகொடுத்திருந்தது, இன்னும் களமிறங்கி மொத்த குடும்பத்தை தொலைக்க அவர்கள் தயாரில்லை

ஆனால் நீங்களோ உங்கள் கட்சியோ ஒரு முடியினையாவது இழந்தீர்களா? பின் ஏன் நீங்கள் 2009ல் சத்தம் போடவில்லை

ஈழம் என்பது தேசிய சிக்கல், காங்கிரஸ் பாஜக என இரண்டும் ஒன்றாகத்தான் பார்க்கின்றன, அவ்வளவு ஏன்? அந்த ராஜிவ் கொலைகுற்றவாளியினை பாஜக அரசு விட்டுவிடுமா? விடசொல்லுங்கள் பார்க்கலாம்

தமிழிசையின் தகிடதோம் எல்லை மீறுகின்றது

ராகுல் பகவத் கீதை படிக்க கூடாதா? அதுவும் ஆர்.எஸ்.எஸ்ஸில் இணைந்த்துதான் படிக்கவேண்டுமா?

பகவத் கீதையினை படிக்க யார் அனுமதி வேண்டும்? அது புனிதமான தத்துவ நூல், யாரும் படிக்கலாம்..

அம்மணி ஏன் ஆர்.எஸ்.எஸ் என்றவுடன் இப்படி குதிக்கின்றார்?? இவர் பிஜேபி கட்சி அல்லவா?

விரைவில் காக்கி டவுசருடன் தமிழிசை வந்துவிடுவார் போலிருக்கின்றது , அதனை நினைத்தாலே பகீர் என்கின்றது.