ராகுல் .. சித்தராமைய்யா…
ராகுல் காந்தியின் கார் மீது தாக்குதல்: மன்மோகன் சிங், குஜராத் முதல்வர் கண்டனம்
இது மிக வன்மையாக கண்டிக்கதக்கது. கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், பேசலாம் அதற்காக கல்லெறிவது எல்லாம் ஏற்றுகொள்ள கூடிய விஷயம் அல்ல
குஜராத்தில் வெள்ளம் ஏற்பட்டிருக்கின்றது, எதிர்கட்சி தலைவர் என்றமுறையில் ராகுல் பார்க்க சென்றிருக்கின்றார், அங்கு கல் எறிந்திருக்கின்றார்கள்
இவ்வளவிற்கும் கடந்த 15 வருடமாக பாஜக ஆளும் மாநிலம் அது , கல் எரியவேண்டுமென்றால் அவர்கள் மீதுதான் எறிந்திருக்க வேண்டும், அதனைவிட்டு வெள்ளத்தை பார்வையிட சென்ற ராகுல் மீது எறிவது கண்டிக்கதக்கது
மிக மிக கண்டனத்திற்குரியதும், அவசரமான நடவடிக்கைக்குகுரிய விஷயம் இது
இவ்வளவு நடந்தும் ராகுல் கொஞ்சமும் அலட்டிகொள்ளவில்லை அல்லவா? இதுதான் தந்தை போலவே மகன் என்பது, அவர் தந்தையும் அப்படித்தான்
ஆனால் தமிழகத்தில் இப்படி நடந்தால் விடுவார்களா? பெரும் கலவரம் செய்து அரசியல் ஆக்குவார்கள், இங்கு அப்படித்தான்.
ரெய்டுகள் அரசியல் நோக்கம் கொண்டவை : சித்தராமய்யா
இந்த ரெய்டுகள், கமிஷன்கள் எல்லாம் தொடங்கி வைத்ததே காங்கிரஸின் இந்திரா அய்யா, சர்காரியா கமிஷனும் அந்த வகையறா
ஆனால் “விஞ்ஞான ஊழல்” என ஒரு புது வார்த்தையினை சொல்லிவிட்டு, வேறு ஒன்றும் கண்டுபிடிக்கமுடியாமல்
கமிஷன் ஓடிவிட்டது என்பது வேறுவிஷயம்.