ராகுல் பிரதமரானால்…

ராஜிவ்காந்தி எவ்வளவு அரசியல் அனுபவமில்லாமல் இருந்தார், சொந்தமாக பல விஷயங்களை யோசிக்கமல் தன் அனுபவமின்மையால் எவ்வளவு பெரும் தவறை செய்தார் என்பதை இந்நாளில் நினைத்து பார்க்கலாம்

இதே நாளில்தான் 1987 ஜூலையில் இந்தியா இலங்கை அமைதி உடன்படிக்கை நிறைவேறிற்று, இதன் பின்பு எழுந்த பெரும் குழப்பம்தான் இலங்கையில் 1500 இந்திய வீரர்கள் சாகவும் கடைசியில் ராஜிவே சாகவும் அதன்பின் சுமார் 50 ஆயிரம் மக்கள் முள்ளிவாய்க்காலில் சாகவும் தொடக்கமாயிற்று

இலங்கையில் வல்லரசுகள் கால்பதிக்க முயன்றதையும் அதை முறியடிக்க இந்திரா ஈழவிவகாரத்தை காரணம் காட்டி புகுந்ததும் எல்லோரும் அறிந்தது

இந்திரா இருந்தவரை ஒரு சிக்கலுமில்லை, இந்திரா தனி ஈழத்தை ஆதரிகக்கவுமில்லை அதே நேரம் இலங்கை அரச பகக்ம் சாயவுமில்லை இருவரையும் தன் கட்டுபாட்டில் வைத்திருந்தார்

ராஜிவ் இதனில் திணறினார், இந்திரா இல்லை என்றதும் ஆட்டத்தை அழகாக ஆடினான் தந்திரசாலி ஜெயவர்த்தனே

வடமராட்சியில் அவன் ராணுவமுற்றுகை செய்தான் அதை புலிகள் தகர்த்தனர், மில்லர் எனும் புலி தற்கொலை தாக்குதல் நடத்தி சுமார் 200 சிங்கள வீரர்களை கொன்றான்

உண்மையில் சிங்களம் அதிர்ந்து கிடந்தது, இனி புலிகளை அடக்கமுடியாது எனும் நிலைவந்தபொழுதுதான் அவன் அங்கு முற்றுகையிட்டு முடக்கினான்

ராஜிவ் நிதானமாக இருந்திருக்க வேண்டிய நேரம் அது, ஆனால் ஜெயவர்த்தனே வலையில் வசமாக சிக்கினார், அவர் நினைத்திருந்தால் இந்திய உளவுதுறை அல்லது வெறு வழியாக விளையாடியிருக்கலாம் அவரின் அனுபவமின்மை அங்கு பளிச்சிட்டது

இந்திய ராணுவ விமானங்கள் உதவியுடன் வரமராட்சியில் உணவு வீசி கொழும்புவினை மிரட்டினார், இதை எதிர்பார்த்து மகிழ்ந்த ஜெயவர்த்தனே பயப்படுவது போல் நடித்து சமாதானத்துக்கு ஓடிவந்தான்

ஜெயவர்த்தனே புலிகளை இந்தியா மூலம் அதாவது இந்தியா வளர்த்த புலிகளை இந்தியா மூலமே ஒழிக்கநினைக்கின்றான் என புரிந்துகொள்ளமுடியாத ராஜிவ் வலையில் சிக்கினார்

தீட்சித் போன்ற அதிகாரிகளும் அவருக்கு தவறான தகவல்களை கொடுத்தார்கள், ராஜிவ் குழம்பினார்

இலங்கை தமிழர் சிக்கலில் இலங்கை தமிழர் பிரதிநிதிகள் யாருமில்லாமல் ஒரு ஒப்பந்தம் தயாரிக்கபட்டு ராஜிவும் ஜெயவர்த்தனேவும் அதை செய்வார்கள் என்பது நிச்சயம் அநீதி

இந்த அநீதியினை டெல்லி அசோகா ஹோட்டலிலே தைரியமாக எதிர்த்தான் பிரபாகரன் ஆனால் அவன் குரல் எடுபடவில்லை

அதே நேரம் இந்திய ராணுவம் வருவதை சிங்களதரப்பும் விரும்பவில்லை, கொழும்பில் ராஜிவ் மேல் நடந்த கொலைமுயற்சியும் அந்த சிங்களவன் பின் எம்பியானது அதை சரியாக காட்டியது

சிங்கள மக்களை பகைத்த ராஜிவ், தமிழரே இல்லாத தமிழர் உரிமை ஒப்பந்தம் செய்து தமிழரையும் பகைத்தார்

இன்னும் ஜெய்வர்த்தனே 17 புலிகளை பிடித்தபொழுது ராஜிவ் காட்டிய அமைதியும் அவர்கள் தற்கொலையும் தொடர்ந்து திலிபனின் சாவும் நிலமையினை கொந்தளிக்க வைத்தன‌

ராஜிவ் அப்பொழுதும் காத்த அமைதிதான் புலிகளுக்கும் இந்திய ராணுவத்துக்குமான யுத்தத்தை தொடங்கியது

இன்று உக்ரைனில் ரஷ்யா சிக்கியது போல இந்தியா புலிகள் முகமூடியில் வல்லரசுகளிடம் சிக்கி சுமார் 1500 வீர்ர்களை இழந்து இரு ஆண்டாக தடுமாறி தோல்வியுடன் திரும்பியது

பின் ராஜிவ் கொலையும் நடந்தது, அது இந்தியாவினை இலங்கையில் இருந்து பிரித்தது

அந்த பிளவு 2009ல் பெரும் அழிவுடன் முடிந்தது

இப்பொழுது மோடிகாலத்தில் இந்தியா இலங்கை உறவுகள் சீரடைகின்றன, ராஜிவ் இரு இனங்களையும் பகைத்து அழிந்த நிலையில் மோடி ராஜதந்திரமாக இரு இனங்களையும் இந்தியாவின் நண்பர்களாக்கி இன்று நிலமை சரியாகின்றது

ராஜிவின் அனுபவன்மையினை ஜெயவர்த்தனே எனும் தந்திரசாலி அழகாக பயன்படுத்தினான்

ஈழதமிழரின் அனைத்து குழப்பங்களுக்கும் காரணமானதும், பல்லாயிரம் பேர் சாகவும் ராஜிவும் சாகவும் காரணமான அந்த குழப்பமான ஒப்பந்தம் நிறைவேறிய நாள் இன்று

ராஜிவ் ஒரு சீனியர் ராகுல்காந்தியாக இருந்தார்

ராகுல் பிரதமரானால் இதைவிட பெரும் சீரழிவுகளையெல்லாம் இந்தியாவும் உலகமும் சந்திக்கும் என்பது மட்டும் நிஜம்