ராக்கெட் ராஜா பற்றி எந்த அறிவிப்பும் இல்லை
காவல்துறை ராக்கெட் ராஜா பற்றி எந்த அறிவிப்பும் செய்யவில்லை, அவரை சுட்டுபிடிக்கும் உத்தரவோடு அலையவில்லை, அப்படி சுவரொட்டி எல்லாம் ஒட்டி அவரை தேடவில்லை
ஒருவர் மீது காரணமின்றி போலிஸ் கொலைமிரட்டல் விடுத்தால், அவர் மீது குற்றமில்லை என்றால் நீதிமன்றம் செல்லலாம், முன் ஜாமீன் பெறலாம்
ஏகபட்ட நடைமுறைகள் உண்டு,, இந்நாட்டு சட்டம் அப்படியானது,
ஆனால் ராக்கெட் ராஜா என்பவர் அப்படி எல்லாம் செய்ய மாட்டாராம், காரணம் அவர் நாடாராம்
இவருக்கு நாடார்கள் எனும் நாட்டை ஆளும் முதல்வர் தனபாலன் என்பவர் தலமையில் உண்ணாவிரதம் இருப்பார்களாம்,
அதாவது ராக்கெட் ராஜா என்பவர் கோர்ட்டில் சென்று ஏன் என்னை கொல்ல தேடுகின்றீர்கள் என போலிசிடம் கேட்க மாட்டாராம், தன் பக்க நியாயத்தை நிரூபிக்கமாட்டாராம்
ஆனால் அவரை தொடாதே என இவர்கள் உண்ணாவிரதம் இருப்பார்களாம்
எல்லா சாதியும் இப்படி கிளம்பிவிட்டால் நாடு தாங்குமா? இந்த மாநிலம் தாங்குமா?
அவர் சமூக போராளியாம் , அப்படி எத்தனை நலதிட்டங்களை பெற்றுகொடுத்தார் என்பதும் தெரியவில்லை
நல்ல அரசு என்றால் ராக்கெட் ராஜாவினை நீதிமன்றத்தில் நிற்க செய்து, உன்னை மிரட்டியவர் யார்? என்ன சொன்னார்கள்? என கேட்டு செய்ய வேண்டியதை செய்ய வேண்டும்
அதற்கு முன் இப்படி உண்ணாவிரதம் இருப்பவர்களை தூக்கி அடைக்க வேண்டும், இது மிக மோசமான முன் உதாரணம், நாளை எல்லா சாதி சங்கங்களும் இதனை பின்பற்றும்
என்ன நடக்கின்றது?
ஒரு நீதிபதி ஓடி ஓளிகின்றார் அவரையும் இன்னும் பிடித்தபாடில்லை, ஒரு ரவுடியும் இப்பொழுது ஓடி ஒளிகின்றார்
இருவரும் மறைவிடத்தில் சந்தித்துகொண்டால் என்ன பேசிகொள்வார்கள்? இருவரும் முதலில் சத்தம் போட்டுத்தான் சிரிப்பார்கள்
நாடு அந்த நிலைக்கு சென்றுகொண்டிருக்கின்றது
இந்த உண்ணாவிரதம் எல்லாம் பெரும் மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்த கூடியது, அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டிய காரியமிது
இந்த நாடார்களின் முதல்வர் போல பல சாதி முதல்வர்கள் உண்ணாவிரதம் இருக்கும் முன் தமிழக அரசு விழித்துகொள்வது நல்லது