ராஜனி திராணகம‌

அவள் ராஜனி திராணகம‌

யாழ்பாணத்து தமிழ் பெண், ஆனால் சிங்களனை காதலித்து மணந்திருந்தாள்

அன்று அவளுக்கு 34 வயதுதான் ஆகியிருந்தது, டாக்டர், அதுவும் லண்டனில் படித்து வந்த திறமையான டாக்டர், யாழ்பாண மருத்துவ கல்லூரியின் புகழ்மிக்க பேராசிரியர்

ஆனால் யாழ்பாண டாக்டர் என்ன செய்திருக்கவேண்டும்? புலிகளுக்கு மட்டும் மருந்து கொடுத்து கட்டுபோட்டு பாதுகாத்திருக்கவேண்டும், அது தமிழ் உணர்வு, அது போராட்டம், அவள் தமிழச்சி

ஆனால் இவள் செய்ததென்ன? அதிதீவிரவாதத்தை விமர்சித்தாள், கடும் மூர்க்கமான போராட்டம் அடுத்த சந்ததியினை பாதிக்கும் என குரல்கொடுத்தாள். மனித உரிமைகளை மதிக்கா போராளிகள் உலகில் இருந்து அப்புறபடுத்தபடுவார்கள் என பகிரங்கமாக சொன்னாள்,

இந்த கொடூர மூர்க்கம் யாருக்கும் எந்த பலனும் தராது என அன்றே சொன்னாள்.

உச்சகட்டமாக முறிந்த பனை என புத்தகமும் எழுதினாள், அது உலகளவில் கடும் சலசலப்பினை ஏற்படுத்தியது,

புலிகளின் உண்மையான கோரமுகத்தை முதலில் சொன்ன புத்தகம் அதுவே, ராஜினியின் துணிச்சல் அப்படி இருந்தது

விடுமா புலி?

யாழ்பாண பல்கலைகழகத்தில் இருந்த புலி உளவாளி ஸ்கெட்ச் போட்டது, வீட்டுக்கு வரும் வழியில் தலையில் மும்முறை சுடபட்டு நடுவீதியில் இறந்துகிடந்தாள் அந்த்த சிந்தனையாளர்.

வீதியெல்லாம் சிதறிகிடந்தது மருத்துவம், சமூக சிந்தனையும் நிரம்பிய மூளை

அவளது இரு குழந்தைகள் அவள் உடலை பிடித்து கதறிகொண்டிருந்த கொடுமை எல்லாம் மறக்க முடியாது என்பார்கள்.

பின் அப்புத்தகம் புலிகளால் தடை செய்யபட்டது, அமைதிபடை காலம் என்பதால், தமிழகத்தில் அப்புத்தகம் காணமலே போனது மாறாக பேரரிவாளனும் அவன் சகாக்களும் அமைதிபடையினை விமர்சித்து புலிகளை தேவதூதர்களாக்கிய “சாத்தானின் படைகள்” எனும் புத்தகம் பெரும் பிம்பமாயிற்று

(சாத்தானின் படைகள் புத்தகத்திற்காக விழுந்து விழுந்து உழைத்தவனே இந்த பேரரிவாளன்)

இன்று எல்லாம் கடந்துவிட்ட மயான நிலை

முறிந்த பனை புத்தகம் மறுபடியும் கிடைக்கின்றது, அதில் புலிகளை 27 ஆண்டுகளுக்கு முன்பாகவே கண்டித்த ராஜினியின் குரல் கேட்கின்றது.

இந்த பிரபாகரனும் புலிகளும் பெண் உரிமையினை காத்தான், பெண் கையில் துப்பாக்கி கொடுத்து தலைநிமிர செய்தான் என சில அறிவிலீகள் சொல்லிகொண்டிருக்கும்

உண்மையில் பிரபாகரனால் அறிவார்ந்த பெண்கள் கொல்லபட்டார்கள். ராஜினி, செல்வி என அது நீண்ட வரிசை

இன்று அந்த ராஜினி திராணகம நினைவு நாள்.

ஒரு நாள் புலிகள் படுமோசமாக அழிந்துபோவார்கள் என சொல்லி, புலிகளின் அட்டகாசத்தை எழுதி அதற்காக செத்தும் போன அந்த ராஜினிக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.

அந்த புத்தகத்துக்கு ஏன் முறிந்த பனைகள் என பெயரென்றால், ஈழத்தில் ஏகபட்ட பனைமரங்கள் இருந்தன, யுத்த காலத்தில் அதை அழித்து புலிகள் அரண் கட்டியதும் இன்னும் பல பனை ஒழிப்பும் செய்தார்கள்

பனை ஒழிப்பு இந்த ராமதாஸின் மரம்வெட்டிய போராட்டம் போல சிலாகிக்கபட்டது

அதைத்தான் முறிந்த பனை என ராஜனி எழுதி கொல்லபட்டாள்

அந்த பிரபாகரனின் படத்தைபிடித்தபடி தமிழ்நாட்டில் பனை வளர்கின்றார் அங்கிள் சைமன், இந்த பாவபரிகாரம் என்பது இதுதான்