ராஜபக்சே
அந்த மனிதர் எளிய இலங்கை கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பத்துக்காரர், அக்குடும்பம் சிங்கள பூர்வீகமும் அல்ல, இந்தோனேஷியாவில் இருந்து பன்னெடுங்காலத்துக்கு முன்பு இலங்கைக்கு வந்து ராஜாவுக்கு விசுவாசமான இனமாக இருந்தது, அதனால் ராஜ விசுவாசிகள் என பொருள்படும் ராஜபக்சே எனும் பெயர் வந்தது
அந்த குடும்பத்தின் வழி வந்தவர்கள் அனைவருமே கருணாநிதி குடும்பம் நிதியினை சுமப்பது போல, நேரு குடும்பம் காந்தியினை சுமப்பது போல ராஜபக்சே எனும் பட்டத்தை சுமப்பார்கள்
அந்த வம்சாவழிகளில் ஒருவர் இலங்கை அமைச்சராக இருந்தார் அவர் பெயர் டி.ஏ ராஜபக்சே அந்த ராஜபக்சேவின் இரண்டாம் மகனே மகிந்த ராஜபக்சே, இதுபோக 3 சகோதர்களும் உண்டு
மகிந்த ராஜபக்சே விவசாயத்தில் ஈடுபாடு உடையவர் எனினும் படித்தார் நூலகர் உட்பட பல பணிகலை செய்தார், பின் சட்டம் படித்து வழக்கறிஞருமானார், அப்படியே அரசியல் பக்கம் வந்தார்
பின் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தார், 2006ம் ஆண்டு இவர் தேர்தலில் தோற்க வேண்டிய தருணம், ஆனால் ரணிலை வீழ்த்த மகிந்த ஒரு பிள்ளைபூச்சி என வெல்ல வைத்தது புலிகள்
ஆம் ராஜபக்சேவினை எளிதாக கையாளலாம் என்றே புலிகள் கணக்கிட்டு வெல்ல வைத்தனர்
ராஜபக்சே புலிகள் தொடங்கிய மாவிலாறு பிரச்சினையில் தாக்க சொன்னார், புலி பின்வாங்கிற்று தொடர்ந்து அடிக்க சொன்னார்
வழக்கமாக எல்லா சிங்கள அதிபர்களும் ஒரு கட்டத்தில் பின் வாங்குவார்கள் ஆனால் ராஜபக்சே நிறுத்தவில்லை இது புலிகளுக்கு முதல் அதிர்ச்சி
ராஜபக்சே மிக திறமையாக அந்த யுத்தத்தை நடத்தினார், 20 ஆண்டுகாலம் இலங்கை ராணுவத்தில் இருந்த தன் தம்பி கோத்தபாயாவினை அமெரிக்காவில் இருந்து திரும்ப அழைத்து யுத்தம் நடத்தும் பொறுப்பினை வழங்கினார்
ஆம் வேறு யாரையும் அவர் நம்பவில்லை, சிங்களரில் புலிக்கு விலைபோன கோஷ்டியும் புலிகளுக்கு அஞ்சிய கோஷ்டியும் நிறைய இருந்தது.
இந்தியா, சீனா, அமெரிக்கா என வல்லரசுகளை முள்ளிவாய்க்காலில் தலையிடாதபடி செய்தது அவரின் ராஜதந்திரங்களில் ஒன்று
இன்று அதிபராகியிருக்கும் கோத்தபாயவும் ராஜபக்சேவுமே யுத்தத்தை நிற்காமல் முன்னெடுத்தெனர், புலிகளுக்கு தெரிந்தது ஆயுதபாஷை அதில் பேசினால் போதும் என மகா உறுதியாய் நின்றார் மகிந்த
30 ஆண்டுகாலம் இலங்கையினை ஆட்டிபடைத்த அந்த கொடும்புலியினை தன் உயிருக்கு அஞ்சாமல் புலிகளின் தற்கொலை தாக்குதலுக்கு அஞ்சாமல் கொன்றொழித்ததில் பெரும் அதிசயம் கொடுத்தார்
உலகின் இரும்பு தலைவர்களில் ஒருவரானார், உலகின் மகா இறுக்கமான புலிகளை அவர் சுத்தமாக ஒழித்துகட்டியதில் உலக புகழ்பெற்றார்
பின் ஆட்சியினை விட்டாலும் இன்று கோத்தபாயா மூலம் மறுபடியும் இலங்கையினை ஆள வருகின்றார்
பிரேமதாசா, ராஜிவ் என யாரை எல்லாமோ சாய்த்த புலிகளால், இந்திய ராணுவத்தை திணறடித்த புலிகளால் ராஜபக்சேவின் மயிரை கூட தொடமுடியவில்லை, அவ்வளவு சாதுர்யமாக தப்பினார் மகிந்த
அந்த இலங்கையின் இரும்பு மனிதனுக்கு இன்று பிறந்த நாள்
“ஏ புலி உறுமுது ..புலி உறுமுது” என்ற பாட்டு அவருக்கே பொருந்தும், அப்படித்தான் வேட்டைகாரனாக புலிகளை ஒழித்தார்
அனாரிக தர்மபால, பண்டார நாயக, ஜெயவர்த்தனேவுக்கு பின் இலங்கையின் மகா சக்திவாய்ந்த அந்த மகிந்த ராஜபக்சேவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பழனிச்சாமியினை முதலில் தவறாக எடைபோட்ட ஸ்டாலினுக்கும் மகிந்தாவினை குறைத்து எடைபோட்ட புலிகளுக்கும் வித்தியாசம் ஏதுமில்லை
அவரிடம் ஒரே ஒரு வேண்டுகோள்
நீ ஆயிரம் பிறை கண்டு ஆயிரம் புலிகளை உங்கள் நாட்டில் கொல்லுங்கள், தயவு செய்து அங்கிள் சைமன் ஒரு புலி என கருதி கொன்றுவிட வேண்டாம், காரணம் அவர் இல்லை என்றால் இங்கு அரசியல் காமெடிக்கு பலத்த சிக்கல் ஏற்படும்
அவர் ஒரு ஓரமாக ஏய் ராஜபக்சே ஏங்ங்கோத்தா என சொல்லிகொண்டிருப்பார் அதை எல்லாம் சீரியசாக எடுக்கவேண்டாம் , கேட்டு சிரித்துவிட்டு செல்லவும் என கேட்டுகொள்கின்றோம்…

இலங்கையில் தாமரையினை மலரவைத்திருக்கும் உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்