ராஜபக்சே குடும்பம் இரும்பு ஆட்சி கொடுக்கும் , அரசு சரியாக இருக்கும்
இலங்கையில் சஜித் பிரேமதாச எப்படி தோற்றிருக்கின்றார் என்றால் தமிழ் மற்றும் இஸ்லாமிய ஆதரவு கிடைத்தால் போதும் சிங்கள வாக்கு தானாக கிடைக்கும் என மிதப்பில் இருந்திருக்கின்றார்
இதுவே சிங்களருக்கு அதிருப்தியாகி மொத்தமாக வாக்கு கோத்தபாயாவுக்கு விழுந்தது என்கின்றார்கள்
இது இந்தியாவில் காங்கிரஸ் போட்ட கணக்குக்கும் பாஜகவின் கணக்குக்குமான தொடர்பு அன்றி வேறல்ல
இப்படி எல்லாம் அனுமானம் இருந்தாலும் ராஜபக்சே குடும்பம் இரும்பு ஆட்சி கொடுக்கும் , அரசு சரியாக இருக்கும், இந்த ஆளும் தரப்பு அவ்வளவு நல்ல அரசு அல்ல என இலங்கை மக்கள் நினைத்ததுதான் ஆட்சிமாற்றத்துக்கு காரணம் என்கின்றது இலங்கை தரப்பு