ராஜிவுக்கு பின்னரான காங்கிரஸ் ஏன் ஒழிந்து நாசமாயிற்று?
திமுக காட்டிய பிரிவினைவாதமும் குறிப்பாக ஈழவிவகாரங்களில் இந்திய ராணுவத்தை அவர்கள் அவமதித்த விதமும் ராஜிவுக்கு கொஞ்சமும் விருப்பமில்லா விஷயங்கள்
அமைதிபடை சென்றபொழுது பிரபாரனின் வளர்ப்பு தந்தையான ராமசந்திரனே அமைதியாக இருந்தபொழுது திமுக குதித்தகுதியினை அவர் ரசிக்கவில்லை

ராமசந்திரன் மறைந்தபின்பு முரசொலிமாறன் மூலமாக ஆண்டன் பாலசிங்கம் திமுகவுக்குள் ஊடுருவியதையும் அதன் பின் திமுகவின் ஆட்டம் அதிகமாக இருந்ததையும் கண்டு மனம் நொந்தார் ராஜிவ்
விபிசிங் அரசில் திமுக அமைதிபடையினை வாபஸ் பெற்றபொழுது அதை வன்மையாக கண்டித்தார் ராஜிவ்
பிரபாகரன் என்பவனின் தனிபட்ட பாதுகாப்பு காரணமே அங்கு சிக்கல் என்பதை அழுத்தி சொன்ன ராஜிவினை திமுக கொஞ்சமும் மதிக்கவில்லை
பத்மநாபா கொலையும் அதற்கு திமுக துணை போனதும் ராஜிவின் மனதில் ரணம் ஏற்படுத்திய விஷயம்
புலிகளும் திமுகவும் மிகநட்பாக கைகோர்த்ததே ராஜிவ் கொலைக்கு முதல் காரணம்
இதை ஜெயின் கமிஷன் மிக அழுத்தமாக சொல்லியிருந்தது, நூலிழையில் தப்பியது திமுக
ஆனால் அதே திமுகவும் காங்கிரசும் பின்னர் இணைந்தன
அதே கூட்டணியில் முகமுக்கிய சர்ச்சைநபரான வைகோவும் சேர்ந்தார்
கணவனை கொல்ல துணை போன கட்சி என சோனியாவும் நினைக்கவில்லை, நாம் பாதகம் செய்த கட்சி என இவர்களும் நினைக்கவில்லை
இருவருக்குமே தேவை இருந்தது
இவர் சோனியாவினை சொக்கதங்கம் என்பதும் அவர் இவரை தந்தையே என்றதும் வரலாறு கண்ட மாபெரும் அவமானம்
அரசியல் என்பது அப்படித்தான், தேவை என்றால் எதிரி என்றாலும் அணைப்பதும் தேவை இல்லாவிடில் விலகுவதும் அதில் அறம் எனப்படும்
காங்கிரஸின் வீழ்ச்சி அகில இந்திய அளவில் எதில் தொடங்கிற்று என்றால் விஷயம் எளிது
அவர்கள் தேசத்தையும் ஒரே இந்தியா எனும் மனப்பான்மையினை மறந்தார்கள்
ஆட்சி ஒன்றுக்காக காஷ்மீர் பிரிவினைவாதி, திராவிட பிரிவினைவாதி, அசாம் பிரிவினைவாதி எனஎல்லோரையும் அணைத்தார்கள்
தேசம் முழுக்க அவர்கள் மேல் அதிருப்தி பிறந்தது
என்ன இது? ஒருதேசிய கட்சி இப்படி மாநில பிரிவினைவாதிகளுடனும் மிக பெரும் ஊழல் முதலைகளுடனும் கொஞ்சி கொண்டிருப்பதா? என முகம் சுளித்த மக்கள் ஓட விரட்டினார்கள்
பிரிவினைவாதிகளும் ஒழிந்தனர், காங்கிரசும் ஒழிந்தது
ராஜிவுக்கு பின்னரான காங்கிரஸ் ஏன் ஒழிந்து நாசமாயிற்று என்பதும், இன்று ஏன் குழிதோண்டி படுத்துகொண்டது என்பதும் இப்போது விளங்கியிருக்கும்
ஆம், நாட்டுபற்றும் துணிச்சலும் கொண்ட, பிரிவினைவாதிகளுக்கு சிம்ம சொப்பணமாக விளங்கிய கடைசி தலைவன் ராஜிவ்
அதனால்தான் அவன் புகழ் அப்படியே இருக்கின்றது, அவனுக்கு பின்பு காங்கிரசும் சரிந்தது
பாஜக இன்று பெரும் வெற்றி பெற்றிருகின்றதென்றால் அதற்கு முதல் காரணம் காங்கிரஸில் பெருகிய ஊழலும் அவர்கள் மவுனமாக கோர்த்த பிரிவினை சக்திகள்மேல் மக்கள் காட்டிய வெறுப்பும் அன்றி வேறல்ல
தவறு காங்கிரஸ் பக்கமே இருக்கின்றது, நாடு வேறு வழியின்றி பாஜக பக்கம் சரிந்தது
ராகுல் தன் தந்தையிடம் பாடம் படிக்கட்டும், திருப்பெரும்புதூரில் வணங்கட்டும் ஞானம் வரும்
மாறாக அறிவாலயத்துக்கு ஓடி ஓடி வந்தால் இன்னும் சீரழிவன்றி வேறொன்றுமில்லை