ராணடேவுக்கு வள்ளுவர் மேல் பெரும் அபிமானமா?
வள்ளுவர் கோட்டம் கட்டிவிட்டால் தன் கனவு முடிந்தது என நினைத்துகொண்டிருந்தார் கலைஞர், குமரியில் வள்ளுவனுக்கு சிலை வைக்கும் ஆசை எல்லாம் அவருக்கு இல்லை
விவேகானந்தர் நினைவுமண்டபம் பலத்த சர்ச்சைகுள்ளாகி பின் சுபமாக முடிந்தபொழுது திமுக ஆட்சியில் இல்லை இருந்தால் நடந்திருப்பதே வேறு
ஆட்சிக்கு வந்தபின்பும் கருணாநிதி மனம் குமரி பக்கம் செல்லவில்லை, அவர் அதை தொல்லையாக கருதினார், குமரியினை அதிகம் விரும்பியதில்லை அவர்
அங்கு காமராஜரின் வெற்றியும் காங்கிரஸின் எழுச்சியும் அவருக்கு உவப்பானதல்ல, குமரி என் தொல்லை நெல்லை என் எல்லை” என சொல்லிகொண்டிருந்தவர் அவர்.
கலைஞருக்கு முதன் முதலில் கன்னியாகுமரியில் திருவள்ளுவன் சிலை அமைக்க சொல்லி கடிதம் எழுதியது ராணடே,
ஆம் அந்த விவேகானந்தர் மண்டபத்தை ஒட்டிய பாறையில் எட்டு அடிக்கு ஒரு சிலை எழுப்புங்கள் என முதலில் கடிதம் எழுதியது அவர்தான், 1975ல் எழுதினார்
அதை தொடர்ந்துதான் 1976ல் கருணாநிதி குமரியில் சிலை அமைக்கபடும் என அறிவித்தார், அவர் முதலில் அறிவித்த சிலையின் உயரம் 30 அடி
1977ல் ஆட்சியினை கைபற்றிய ராமசந்திரன் நன்றி மறக்காமல் 1979ல் ராணடே முன்னிலையில் அடிக்கல் நாட்டினார்
பினி ராமசந்திரனும் விட்டுவிட்டார், காரணம் வள்ளுவர் கோட்டம் அப்பொழுதுதான் திறக்கபட்டிருந்தது
1989ல் வந்த கருணாநிதி மறுபடி போராடி 2000ம் ஆண்டு சிலை திறந்தார், ஆனால் சிலை அமைக்க காரணமான ஆர்.எஸ்.எஸ் பற்றி ஒருவார்த்தையும் சொல்லாமல், ராணடே கடிதம் எழுதியதை கூட மிக நுட்பமாக மறைத்து தானே கனவு கண்டு தானே சிலை அமைத்ததாக அய்யன் திருவள்ளுவனார் என சொல்லிகொண்டார்
ராணடேவுக்கு வள்ளுவர் மேல் பெரும் அபிமானமா என்றால் இன்னொரு கிறிஸ்தவ சிலை அங்கு வந்துவிட கூடாது என்ற கவலை இருந்தது,
விவேகானந்தர் பாறையினையே சேவியர் பாறை என சொல்லி சிலுவை நட்டு அழிச்சாட்டியம் செய்த கோஷ்டிகள் உள்ள இடம் அது,
அவர்கள் இன்னொரு மொட்டை பாறையில் ஆலயம் கட்ட அல்லது வம்புக்கு ஏதும் செய்ய இடம் கொடுத்தல் கூடாது அதே நேரம் இன்னொரு இந்து அவதார சிலையினை வைக்கவும் ராணடே தயாராக இல்லை.
அதில் இன்னொரு இந்து தர்ம சிலை அமைந்தால் நிலமை சிக்கலாகும் அதே நேரம் கிறிஸ்தவ சிலை வந்தால் சர்ச்சையாகும்
மிக தேர்ந்த ராஜதந்திரியான ராணடே வள்ளுவனை இழுத்துவிட்டு காரியத்தை கன கச்சிதமாக முடித்தார்
இதுதான் நடந்த வரலாறு, ஆனால் திமுக உபிக்கள் அவர்கள் கற்பனையில் கன்னியாகுமரிக்கு வள்ளுவனை கொண்டுவந்தது கலைஞர் என மூக்கு சீந்திகொண்டே இருக்கும்
திருவள்ளுவன் சிலை கன்னியாகுமரியில் அமைய காரணமே அந்த ராணடே எனும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் என்பதுதான் வரலாற்று உண்மை
