ராணுவ அரசியல் இல்லையா?
ராணுவ நடவடிக்கையினை அரசியலாக்கிய முதல் கட்சி திமுக
ஆம் இலங்கைக்கு படை அனுப்பிய தமிழரான அதாவது அப்பொழுது இந்திய ராணுவ தளபதியாக இருந்த சுந்தர்.ஜியின் திட்டத்தை, அவர் அனுப்பிய படையினை விமர்சித்து இங்கு அரசியல் செய்தவர்கள் இவர்கள்தான்
ஆம் இலங்கைக்கு படை அனுப்பிய இந்திய ராணுவ தளபதி தமிழர், இங்கே அந்த ராணுவத்தை எதிர்த்து கூப்பாடு போட்டதும் தமிழர்காவல் திமுக
சொந்த நாட்டு ராணுவத்தை கற்பழிப்பு படை, தமிழ்ர் ஒழிப்பு படை என சொல்லி அயோக்கிய அரசியல் செய்தது இவர்களே
1000க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் சாகும்பொழுதும் தேசவிரோத புலிகளுக்கு அடைகலமும், மருத்துவமும் கொடுத்தது இவர்களே
இது ஒன்றும் ரகசியமல்ல
இந்தியா எனும் நம்நாட்டு ராணுவம் இன்னொருநாட்டில் செய்த நடவடிக்கையினை அரசியலாக்கி வழிகாட்டியது இந்த கூட்டமே
விபிசிங்கிடம் அமைதிபடையினை மீட்க அழுத்தம் கொடுத்து, அமைதிபடையினை மீட்டது நாங்களே என தம்பட்டம் அடித்ததும் இவர்களே
“தமிழரின் ரத்தம் சிந்திய கைகளுடன் வரும் ராணுவத்தை வரவேற்கமாட்டேன்..” என சொல்லி தன் பதவிபிரமாண உறுதிமொழியினை மீறி அரசியல் செய்தார் கருணாநிதி
அதை பெருமையாகவும் சொல்லிகொண்டார்
இந்திய தேசியகொடியினை கோட்டையில் ஏற்றும் ஒரு முதல்வர் செய்யகூடிய விஷயமா இது? இது எவ்வளவு பெரும் அயோக்கிய அரசியல்
அது ராணுவ அரசியல் இல்லையா?
இவர்கள் ஆயிரம் செய்யலமாம், ஆனால் வேறு யார் பேசினாலும் ராணுவ பெருமைக்கு ஆபத்தாம்
இந்திய ராணுவத்தை மகா கேவலமாக கொச்சைபடுத்திய கட்சி திமுக போல இந்தியாவில் இன்னொரு கட்சி உண்டா?
கிடையவே கிடையாது
அவர்கள்தான் இன்று ராணுவபெருமைக்கு பாடம் எடுக்கின்றார்களாம்
எந்த அமைதிபடையினை விமர்சித்தார்களோ எதை தமிழர் ஒழிப்பு படை, சாத்தான் படை என விமர்சித்தார்களோ அதைபற்றி இப்பொழுது வாயே திற்க்கமாட்டார்கள் திமுகவினர்
ஆம் தூக்கிபோட்டு மிதித்தாலும் வாய்திறக்கமாட்டார்கள்
ஏனென்றால் காங்கிரஸ் அவர்கள் கூட்டணியில் இருக்கின்றது, எதிர்கால அமைச்சரவை கணக்க்கும் இருக்கின்றது
அமைதிபடை அரசியலை வெகு அட்டகாசமாக செய்த கோஷ்டிதான் இன்று பாஜக ராணுவ அரசியல் செய்கின்றது என கிளம்புகின்றது
அதை சொல்ல ஒரு தகுதி வேண்டாமா?