ராதாபுரம் பகுதிக்கு நல்லது

இத்திட்டம் நிறைவேறினால் நிச்சயம் ராதாபுரம் பகுதிக்கு நல்லதுமுன்பு கூடங்குளம் அணுவுலைக்கு பேச்சிபாறை நீர் வருவதாக இருந்தது, குமரி மாவட்டத்தின் கடும் எதிர்ப்பால் அது நிறைவேறவில்லைபழையாற்றில் இருந்து ராதாபுரம் கால்வாய்க்கு தண்ணீர் திருப்புவது சிரமம், எனினும் விஞ்ஞான காலத்தில் எல்லாமே சாத்தியம் என்பதால் அதை செய்யலாம்தமிழகத்தின் வறட்சி நிலையினை காட்ட மத்திய அமைச்சருடன் ஹெலிகாப்டரில் ராதாபுரம் பக்கம் வந்தார் காமராஜர், வறண்ட பகுதியினை பார்த்துகொண்டே சென்றபொழுது திடீரென வாழை, நெல் வயல்கள் வந்தன‌நாம் தஞ்சாவூருக்கு வந்துவிட்டோமா என்றார் அமைச்சர்”இல்ல இது திறுக்குறுங்குடி பக்கம்ணே, இங்க செழுமை கொஞ்சம் தள்ளி கடும் வறட்சிண்ணே, ஆண்டவன் அப்படி படைச்சிட்டாம்ணா நாம விடமுடியுமா? ராதாபுரம் பக்கம் ஏதும் செய்யணும்ணே”அப்படிபட்ட பெரும் தலைவர்களின் கனவும் அந்த பக்கத்தை செழிக்க வைப்பது, அது நடந்தால் மகிழ்ச்சிஅப்படியே நம்பியாற்றை மீட்டெடுப்ப்பது நலம் இன்னும் மேற்கே செல்லும் சில ஆறுகளை கொடுமுடியாற்றில் கலந்தால் தென்னக முனையினை கடும் வறட்சி அகலும், ஒரு சொட்டு நீருக்காக 500 அடி தாண்டியும் கிடைக்காமல் கண்ணீர் விடும் அந்த கொடும் காட்சிகள் மாறும்