ராமசந்திரனின் நூற்றாண்டு விழாவாம்!

Image may contain: 2 people, people smiling, beard, selfie and close-up

ராமசந்திரனின் நூற்றாண்டு விழாவாம்

சரோஜா தேவியினை அழைக்காமல், லதாவினை முன் வரிசையில் அமர வைக்காமல் அது என்ன நூற்றாண்டு விழா? இவர்களை விட ராமசந்திரனின் புகழை யாரால் பாட முடியும்?

யாருக்காக புகழ்மிக்க மேலவையினை ராமசந்திரன் கலைத்தாரோ அந்த புகழ்மிக்க வெண்ணிற ஆடை நிர்மலாவினையும் அழைக்கவில்லை.

ராமசந்திரன் “அம்மா அம்மா” என அலறிய அம்மா நடிகைகளையும் காணவில்லை

ராமசந்திரன் கெஞ்சி நீர் வசனம் எழுதினால்தான் என் வாழ்வு என கண்ணீர்விட்டு அழுத அந்த கலைஞர் கருணாநிதியினையும் அழைக்கவில்லை

கலைஞரை விட ராமசந்திரனுக்கு உதவியது வரலாற்றில் யார்?

ராமசந்திரனுக்கு முதல் வெற்றி பெற்றுகொடுத்த மாயத்தேவரையும் காணவில்லை

ராமசந்திரனின் நிழல் அரசியல்வாதியாக இருந்த ஆர்.எம் வீரப்பனையும் காணவில்லை

இப்படி ராமசந்திரனின் சினிமா, அரசியல் என எல்லாவற்றிலும் உடனிருந்தவர்களை எல்லாம் விட்டுவிட்டு , யார் உரிமையுள்ளவர்களோ அவர்களை விட்டுவிட்டு பன்னீரும், பழனிச்சாமியும் தலைகீழாக நிற்கின்றார்கள்

ஏம்பா, பச்சை கிளி முத்து சரம் என உங்கள் தலைவன் டூயட் பாடிய அந்த தாய்லாந்து பெண்ணையாவது “சிறப்பு” விருந்தினராக அழைக்க கூடாதா?

அந்த தாய்லாந்துகாரி சாபமிட்டால் வங்க கடல் பொங்கும், ராம்சந்திரன் சமாதி மூழ்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்