ராமானுஜர்
ஒன்பதாம் நூற்றாண்டில் வைணவ மறுமலர்ச்சி ஏற்பட்டது, ஆதிசங்கரரின் எழுச்சிக்கு பின் சைவமும் வைணவமும் வளர்ந்தன
அந்த வைணவ பரம்பரை நாதமுனிகள் என்பவரிடம் இருந்து தொடங்குகின்றது, சைவத்தில் நம்பியாண்டார் நம்பி போல வைணவத்தில் அவர்தான் ஆழ்வார்கள் வரலாறு இன்னும் பல விஷயங்களை தொகுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க தொடங்கினார், ஆச்சாரிய குருபரம்பரை அவரால் தோற்றுவிக்கபட்டது
அந்த பரம்பரையில் ஆளவந்தார் எனும் யமுனாச்சாரி அவர் திருவரங்கத்தில் இருந்து மிகபெரிய வகையில் வேத விளக்கங்களுடன் வேத பரிபாலனுமும் பகவான் சேவைகளும் செய்துகொண்டிருந்தார்
அந்நேரம்தான் திருபெருபுதூரில் அக்குழந்தை பிறந்து வளர்ந்தது, ஆருலகேசவ சோமயாகி. தாய் காந்திமதி அம்மையார் என்பவருக்கு மகனாக ராமானுஜம் எனும் பெயரோடு வளர்ந்தது
இளவயதில் உபநயணம் உள்ளிட்ட சடங்குகளை பெற்ற அச்சிறுவன் ஞானசூரியனாய் வளர்ந்து வந்தான், அன்றைய வழமைபடி சிறுவயதிலே திருமணமும் முடிந்தது
அவனுக்கு ஒரு குரு கிடைத்தார் யாதவ பிரகாசம் என அவருக்கு பெயர், காஞ்சிபுரத்தை அடுத்த திருப்புட்குழியினை சேர்ந்தவர், அவரிடம் மாணவனார் ராமானுஜர்
“‘தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீக மேவ மக்ஷிணீ ’ என்ற வேதத்துக்குப் பொருள் கூறினார் யாதவபிரகாசர், இதற்கு பிரம்மத்தின் கண்கள் தாமரை போன்றவை என பொருள்
ஆனால் இது வைணவ கொள்கைக்கு சரியில்லாதது போல் தோன்றிதால் யாதவ பிரகாசர் பிரம்மத்தின் கண்கள் குரங்கின் பின்புறம் போன்றது என சொல்லிவிட சரியான பொருளை சொல்லி கண்ணீர் விட்டார் ராமானுஜர்
ஒரு பக்கம் தன் மாணவன் மேல் கோபமும் அதே நேரம் அவனால் அவமானமும் வந்துவிட கூடாது எனபதாலும் அவனை தொலைக்க எண்ணி காசிக்கு அழைத்து சென்றார், அங்கே விட்டுவிட்டு வர ஏற்பாடு
ஆனால் பகவானும் அன்னையும் அவரை வேடன் வேட்டுவச்சி வடிவில் காத்து கொண்டுவந்தார்கள்
அதன் பின் திருகோஷ்டியூர் நம்பி எனும் குருவுக்கு மாணவரானார், அப்பொழுதுதான் யாருக்கும் உபதேசிக்கா அரிய மந்திரத்தை, முக்தி அடையும் மந்திரத்தை நம்பி அறிவிக்க அதனை கோபுரத்தில் ஏறி மக்கள் எல்லோருக்கும் சொன்னார் ராமானுஜர்
குருநாதர் நம்பி “நீ செய்தது குருதுரோகம், இதனால் உனக்கு நரகம் வாய்க்கும்” என்றபொழுது , “இம்மக்களெலாம் சொர்க்கம் செல்ல நான் ஒருவன் நரகத்துக்கு சென்றால் தவறில்லை” என ராமானுஜர் சொன்னபொழுது கோபம் மறைந்து அவரை ஆர தழுவி “நீ ஞானி..” என சொன்னார் குரு
அந்த ராமானுஜரின் புகழ் எல்லா இடங்களிலும் பரவியது, நாடெங்கும் அவரின் பணி இருந்தது
ஒருவகையில் ராமானுஜருக்கு அடுத்து இந்தியா முழுவதும் அறியபட்ட தமிழக ஞானியாக அவர் இருந்தார், வாதத்திலும் இதர ஞானத்திலும் அவரை வெல்வார் யாருமில்லை பாரதம் முழுக்க அவர் பயணபட்டார்
நாடுமுழுக்க சுற்றிவந்தபின் அக்கால சமூகத்தில் சாதிய விஷயங்கள் பல மக்களுக்கு குழப்பம் விளைவிப்பதை அறிந்தார், வேதம் எல்லோருக்கும் பொதுவானது எல்லா மக்களுக்கும் பொதுவானது என்பதை போதித்தார்
உறங்காவில்லி தாசர் என்ற தாழ்த்தப்பட்ட சமுதாய மாணவரை தனது சீடராக ஏற்றுக்கொண்டவர். இது பெரும் புரட்சியாக கருதபட்டது
சில எதிர்ப்புகள் வந்தாலும் வேதங்களில் சாதியில்லை, பகவானும் சாதிபடி பேசவில்லை, எக்குலமாயினும் உரிய தகுதி இருப்பின் எங்கும் சேர்த்துகொள்ளலாம் என வாதிட்டபொழுது பதில் சொல்ல யாருமில்லை
தாழ்த்தபட்ட மக்களை “திருகுலத்தோர்” என முதலில் அழைத்தது அவர்தான், அவர்களை மிக இயல்பாக அணைத்து சேர்த்து கொண்டவரும் அவர்தான்
(இதைத்தான் பின்னாளில் காந்தி ஹரிஜனங்கள் என சொன்னார், காந்திக்கு வழிகாட்டியது ராமானுஜரே)
தமிழில் வழிபாடுகளை செய்யும் முறையினை அவர்தான் ஏற்படுத்தினார், இன்றும் வைணவ தமிழ் தனித்து நிற்கவும், நாலாயிர திவ்ய பிரபந்தம் முழங்கவும் அவர்தான் ஒரே காரணம்
நாடெங்கும் அவர் புகழ் பரவிற்று, தனிபெரும் மகானாக அவர் போற்றபட்டார் , காஞ்சியில் அவர் தங்கியிருந்தபொழுதுதான் திருவரங்கத்தில் இருந்து அந்த பெரியவர் யமுனாச்சாரி அழைப்பதாக செய்தி வந்தது
யமுனாச்சாரி மிகபெரிய மகான், மாபெரும் நூல்களை இயற்றிகொண்டிருந்தார் ஆனால் அவர் காலம் முடிவதை எண்ணி தன் பொறுப்பையும் திருவரங்க ஆலயத்தையும் ராமானுஜரிடம் ஒப்படைக்க வேண்டித்தான் அழைத்திருந்தார்
ஆனால் அவர் வரும் முன் யமுனாச்சாரியின் உயிர் பிரிந்தது, எனினும் வலகரத்தில் மூன்று விரல்கள் நீண்டிருந்தன
ராமானுஜர் யமுனாச்சாரியின் உயிரற்ற உடலை கண்டு கண்ணீர் வகுந்தார், அப்படியே நீட்டிய முவிரல் ஏதோ சொல்வதை குறிப்பால் அறிந்து தன் தவத்தால் அந்த கட்டளையினை உணர்ந்தார்
பிரம்ம சூத்திரத்திற்கு விசிஷ்டாத்வைதத்தை நிலைநாட்டி ஓர் உரை எழுதுவது
விஷ்ணுபுராணம் இயற்றிய பராசரரின் மற்றும் பாகவதம் இயற்றிய வேதவியாசர் ஆகியோரின் புகழை எல்லோரிடம் கொண்டு சேர்ப்பது
வேதத்தை அழகுத்தமிழில் பாசுரங்களாய் ஈந்த நம்மாழ்வாரின் பெயர், உலகில் என்றென்றும் வாழும்படி செய்வது
இம்மூன்றும் தன் மிகபெரிய கடமை என உணர்ந்த ராமானுஜர், சில ஆண்டுகள் தவமிருந்து பிரம்ம சூத்திரத்திற்கு விளக்கம் எழுதி முடித்த்தார்
பராசரர் மற்றும் வேதவியாசர் பெயர்களை தன் நம்பிக்கைகுரிய சீடன் கூரத்தாழ்வாரின் குழந்தைகளுக்கு இட்டு அவர்களை பெரும் காவியங்கள் எழுத பழக்கினார், பரராசர் எழுதிய விஷ்ணு சஹஸ்கரநாம உரை தன்னிகரற்றது
நம்மாழ்வாரின் பாடல்களை தன் சீடன் திருக்குருகைப்பிரான் பிள்ளான் மூலம் உலகறிய செய்தார்
இப்படி சமூக ஆன்மீக பணிகளை தாண்டி மிக திறமையான நிர்வாகியாகவும் அவர் விளங்கினார், திருவரங்க ஆலயத்தை மிக மிக துல்லியமாக நிர்வாகித்தார்
அந்த கோவிலுக்கு சகல அதிகாரமும் சகல ஞானமு வழிகாட்டலும் உடையவராக விளங்கியதால் அவர் “உடையவர்” என்றே அழைக்கபட்டார்
அவர் காலத்தில் திருவரங்கம் மாபெரும் புண்ணிய பூமியாக ஒரு குறை சொல்லமுடியா அளவு பூலோக சொர்க்கம் போல் விளங்கிற்று என்கின்றது வரலாறு
இந்தியாவின் மிக முக்கிய குருமார்களில் மூவரில் ஒருவர் என அடையாளம் பெற்றார் ராமானுஜர், சங்கரரும் மத்வரும் மற்ற இருவர்
மூன்று முக்கிய குருமார்களில் ஒருவர். மற்ற இருவரில் ஒருவர் ஆதி சங்கரர். மற்றவர் துவைத சமயப்பிரிவை நிலைநாட்டிய மத்வர்.
விசிஷ்டாத்வைதத்தை அழகு வரிகளில் மிக எளிதாக விளக்கி அதை நிறுத்தி காட்டியவர் ராமானுஜர்
ராமானுஜரின் பெரும் முத்திரையில்தான் நாடெங்கும் வைணவம் துளிர்த்தது பின் வந்த மாபெரும் ஞானிகளான ராகவேந்திரர் முதல் பலர் உருவாக அவர் இட்ட விதைதான் காரணம்
120 ஆண்டுகள் வாழ்ந்த அம்மகான் திருவரங்கத்திலே சமாதிநிலை அடைந்தார், அவரின் உடல் இன்றும் திருமேனியாக அங்கு காக்கபடுகின்றது, அது அவரின் அழியா உடல் என்பது ஆச்சரியம்
(இன்னும் இரு திருமேனி அதாவது செய்யபட்ட மேனி திருபெரும்புதூரிலும் கன்னட மேல் கோட்டையிலும் உண்டு
சிலைவைத்து வணங்குவதை விட திருமேனி வழிபாடு மிக மேலானது, அந்த அளவு பெரும் தாக்கத்தை அவர் ஏற்படுத்தியிருக்கின்றார்)
இன்றும் திருவரங்க ஆலய கணக்கு வழக்குகள் அவர் சன்னதிக்கு முன்பாக வைக்கபடுவது மரபு
பாரத்தை ஆன்மீகத்தால் கட்டி போட்டவரும், சாதியினை ஒழித்து சீர்த்திருத்தம் பல செய்தவரும், இன்னும் அழியா நூல்களை கொடுத்தவரும், மிக தூய நிர்வாகியாக விளங்கியவரும், தமிழில் மிக உருக்கமான பக்தி நூல்களும் வழிபாட்டு நூல்களும் எழ காரணமானவருமான அந்த ராமானுஜர் ஒரு அவதாரம்
அந்த மகானின் அவதார ஜெயந்தி இன்று கொண்டாடபடுகின்றது
தேசம் அந்த மகானுக்கு மாபெரும் அஞ்சலியினை தெரிவிக்கின்றது
தமிழகத்தின் தனிபெரும் ஞானி ஒரு வரம், அந்த ஆன்மீக அணைகட்டு கொடுத்த ஞானவெள்ளம் பல்லாயிரம் ஆண்டுக்கு போதுமானது, ஹிந்துமதத்தின் ஞானபயிர் அந்த அணையினால்தான் விளைந்து கொண்டே இருக்கின்றது
ராமானுஜர் ஜெயந்தி அன்று அவரின் அற்புதமான பதிவு..சுமார் 950 வருடங்களுக்கு முன்பே பெண்களை ஆலய நிர்வாகத்தில் ஈடுபடுத்தி,சமூகமே அறியும் வண்ணம் பெண்களுக்குப் பல சமயப்பொறுப்பு கொடுத்து..
அத்துழாய்,
ஆண்டாள்,
பொன்னாச்சி,
தேவகி,
அம்மங்கி,
பருத்திக் கொல்லை அம்மாள்,
திருநறையூர் அம்மாள்,
எதிராச வல்லி…
என்று எத்தனை எத்தனை பெண்கள், அவர் அரங்கத்து குழாமில்!
பெண் குலம் தழைக்க வந்த பெரும்பூதூர் மாமுனிகள்
இராமானுசன் திருவடிகளே தஞ்சம்!