ராம்ஜெத்மலானி
இந்தியாவின் நம்பர் 1 வழக்கறிஞர் என பெயர்பெற்று நெடுங்காலம் அதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்த ராம்ஜெத்மலானி இன்று காலமாகிவிட்டார்
வழக்கறிஞர் தொழில் என்பது சுவாரஸ்யமானது, அறத்துக்கு அப்பாற்பட்டது தந்திரமான வாதமும் இன்னும் சில சிறப்பு குணங்களும் திறமையும் வேண்டும்
ராம்ஜெத்மலானியிடம் அது இயல்பாய் இருந்தது, எந்த வழக்கையும் அவரால் திசைதிருப்பி நொறுக்க முடிந்தது
இந்திய சட்டங்களை படிக்க வேண்டும் அதிலுள்ள சந்துபொந்துகளை தெரிந்திருக்க வேண்டும், சாட்சிகளை அடித்து குழப்பி திகைக்கவைத்து நீதிபதி தலையினை பிய்க்கும் அளவு வைத்துவிட்டால் வெற்றி ரெடி
இந்த வித்தையில் தன்னிரகற்று இருந்தார் ராம்ஜெத்மலானி
மிக நீண்ட அவரின் வழக்கறிஞர் வாழ்க்கையில் இந்தியாவின் எல்லா பிரபல வழக்குகளிலும் அவர் இருப்பார்
இந்திராவுக்கான வழக்கு, அத்வாணி வழக்கு, ராஜிவ் கொலையாளிகளுக்கான வழக்கு, ஹர்ஷத் மேத்தா வழக்கு இன்னும் நரசிம்மராவ் வழக்கு, ஜெயா வழக்கு,கனிமொழி வழக்கு என எல்லாவற்றிலும் அவர் இருப்பார்
வழக்கில் நியாயம் பக்கம் இருந்தாரா அதற்கு எதிர்பக்கம் இருந்தாரா என்பது விஷயம் அல்ல
மாறாக அவர் இருக்கும் பக்கத்தை வெல்ல வைத்தார் மிக சில இடங்களில் மட்டும் தோல்வியினை தழுவினார்
பிரிட்டிஷ் இந்தியாவில் எத்திராஜ் ராஜாஜி போன்ற பிரபல வக்கீல்கள் இருந்தார்கள், சுதந்திர இந்தியாவில் மிக சிறந்த வழக்கறிஞராக நம் கண்முன் நின்றவர் ஜெத்மலானி
அவரின் வாதம் மிக சுருக்கமாக இருக்கும் என்பார்கள் , கடுமையான தயாரிப்புடன் நீதிமன்றம் வரும் அவர், மிக சில வார்த்தைகளையே பேசுவார், அவை தேர்ந்தெடுக்கபட்ட வார்தைகளாக இருக்கும்
தேவை என்றால் மட்டும் கூடுதலாக வாதிடுவார்
இந்தியாவின் எல்லா வழக்கறிஞருக்கும் கனவும் ரோல்மாடலும் அவரே
ஒவ்வொரு வழக்கையும் அவர் உடைத்தவிதம் எந்நாளும் சட்டகல்லூரி மாணவர்களுக்கு பெரும் எடுத்துகாட்டும் விவாதபொருளுமாய் அமையும்
அந்த அளவு சுவாரஸ்யமும் சட்ட நுணுக்கமும் கலந்த வாதங்கள் அவை
அவருக்கு நன்றிசொல்ல எல்லா கட்சி மற்றும் இயக்கங்களுக்கும் பங்கு உண்டு
ஆம் ராஜெத்மலானியின் வாதமே 26 பேரை ராஜிவ் கொலையிலிருந்து விடுவித்தது, அவ்வகையில் தும்பிகள் மற்றும் ஈழபுலிகள் அவருக்கு நன்றிகாட்ட வேண்டும்
கனிமொழிக்கு ஜாமீன் பெற்றுகொடுத்ததும் அவரே
இந்திராவின் கொலையாளிகள் பக்கம் நின்றவரும் அவரே
ஹாஜி மஸ்தான் எனும் மும்பையின் பிரபலதாதாவின் வழக்குகளிலும் அவரே மன்றம் வந்தார்
அத்வாணியின் ஹவாலா வழக்கு மற்றும் ஜெசிக்கா வழக்குகளில் ராம்ஜெத்மலானியின் வாதம் அப்படி இருந்தது
பிரபல தாதா முதல் அரசியல்வாதிகள் என எல்லா முக்கியவழக்குகளிலும் அவர் இருந்தார்
ஒருமுறை மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார்
ஒருவகையில் அவர் தகவல் களஞ்சியம்
அவரின் வாழ்வினை ஒருமுறை படித்தால் ஏராளமான கட்சியின் தலைவர்கள் கதையும் அவர்கள் சிக்கிய வகையும் அட்டகாசமாக தெரியவரும்
எந்த கட்சியும் அதற்கு விதிவிலக்கு அல்ல
வழக்கறிஞர்களின் கனவும் அவர்களின் தொழிலுக்கு வாழும் இலக்கணமாய் வலம் வந்த ராம்ஜெத்மலானி இனி இல்லை
ஆனால் எல்லா வழக்கறிஞர்களும் சட்டபுத்தத்துக்கு சரிக்கு சமமாக படித்தே ஆகவேண்டியது அவரின் வழக்கறிஞர் வாழ்வு
இந்திய வழக்கறிஞர் உலகமும் அவரால் பெரும் விடுதலைகளை பெற்ற அரசியல் உலகமும் இன்னபிற உலகமும் அவருக்கு அஞ்சலி செலுத்திகொண்டிருக்கின்றது
இந்திய நீதிமன்றங்கள் இருக்கும் வரை அவர்புகழ் நிலைக்கும்
