ரோமாபுரி ராட்சசன் : 02

ரோமாபுரி ராட்சசன் 02

cea 2

அடி என்றால் அப்படி ஒரு அடி, முதன் முதலில் ரோமார் எவ்வளவு கடுமையானவர் என்பதை உலகிற்கு சொன்ன முதல் அடி

மாபெரும் ரோமபேரரசினை அமைக்க ஜூலியஸ் சீசராலும் பாம்பேயாலும் முடியும் என்பதை அந்த யுத்தமே சொல்லிற்று

ஸ்பெயின் பிரான்ஸ் என்ற இரு தேசங்களை இணைத்து அவர்களின் ஒரு பகுதியாக விளங்கிய டூனிசியாவின் நகரமான கார்தேஜியன்ஸ்ஸில் உட்புகுந்து வேட்டை ஆடின ரோமை சிங்கங்கள்

ஆம் அன்றைய ஸ்பெயின் ஆப்ரிக்காவின் வடக்கு கரைகளை ஆக்கிரமித்திருந்தது, கப்பற்படை அவர்களிடம் அன்றே இருந்தது

பதிலுக்கு சீசரும் பாம்பேயும் வலுவான கப்பற்படை அமைத்தே களம் கண்டனர்

கார்தோஜ் என்பது இன்றைய டூனிசியாவின் ஒரு பகுதி, பலமுறை நடந்த்த யுத்தத்தின் இறுதி யுத்தமே நாம் காணும் புத்தம்

அந்த ஆக்ரோஷ தாக்குதலை எதிர்கொள்ளமுடியா கார்தேஜியன்ஸ் கோட்டைக்குள் முடங்கினர், அவ்வளவுதான் கோட்டையினை சுற்றி முற்றுகையிட்டு காவல்காத்தது சீசரின் படை

ஒருகட்டத்தின் மேல் பசி இன்னபிற தேவைகள் தாங்கமுடியா படை கோட்டை கதவை திறந்தது, அதுவே பிரசித்தி பெற்ற கியூபிக் போர்

ரோமாபுரியின் படைகள் அடித்த அடியில் கார்தேஜியன்ஸ் அழிந்தனர், மிகபெரும் செல்வத்துடன் ரோம் திரும்பி கான்சல் எனப்படும் ஆளும் குழுவிடம் அதை ஒப்படைத்தான் சீசர்

இதன் மூலம் கான்சல் தெரிந்தது இரண்டு, முதலாவது சீசர் மற்றும் பாம்பே சாதாரண கூட்டணி அல்ல, எந்த போரிலும் வெல்வார்கள்

இரண்டாவது போரின் மூலம் செல்வம் குவிவதால் அதிக போர்கள் தேவை, போர் ஒன்றே நாட்டின் பெரும் தொழில்

கொடூரமானவர்கள், இரக்கமில்லாதவர்கள் என ரோமர் பெயர் பெற தொடங்கியது இங்குதான்

செல்வம் கொழிக்க தொடங்கியது, முன்பே நாம் பார்த்தபடி நிலம் வைத்திருந்த அதிகாரம் வைத்திருந்த ஆளும் வர்க்கம் செழிக்க தொடங்கியது, வெளிநாட்டு யுத்தங்களில் ரத்தம் சிந்திகொண்டிருந்த வீரர்கள் யோசிக்க தொடங்கினர்

அவர்கள் யோசிக்க சொல்லவில்லை, சொல்லி கொடுத்தவன் பாம்பே

பாம்பே மாவீரன் மட்டுமல்ல, மாபெரும் தந்திரக்காரன். இந்நாட்டிற்கு வெற்றிகளை குவிப்பது ராணுவம் அதன் பிரதான தளபதி நான், நான் ஆண்டால் என்ன என்பது அவனின் சித்தாந்தம்

ஆனால் குடியாட்சியினை முடியாட்சியாக்குவது அவனுக்கு சுலபம் அல்ல, என்ன செய்யலாம்? என திட்டமிட்டான்

அன்றிலிருந்து அரசியல் அதுதான் , இந்திராகாந்தி காலம் வரை அதுதான்

எது ?

எதையாவது சொல்லி யாரையாவது தூண்டிவிட்டு, நாட்டுக்கு ஆபத்து என வலுகட்டாயமக பதவியில் அமர்வது, இது ஒரு ராஜநீதி

இதை அன்றே செயல்படுத்தினான் பாம்பே, ஆம் வீரர்கள் புரட்சியில் இறங்கினர், எங்களுக்கு பெரிய சம்பளம் வேண்டும், சொந்தமாக நிலம் வேண்டும் என கோரிக்கை வைத்தனர்

விடுமா ஆளும் வர்க்கம்? இவர்கள் கோரிக்கையினை நிறைவேற்றினால் யார் யுத்தமிடுவார்கள்? தேசம் என்னாகும்? நம் சுகவாழ்வு என்னாகும் என கணக்கிட்டார்கள்

ஆனால் பாம்பேயின் தந்திரமான ஆட்டத்தில் வீரர்கள் ஸ்ட்ரைக் செய்ய, கான்சலின் சீர்திருத்தை லார்டு பிரபுக்கள் சமூகம் ஏற்க மறுக்க நாடு ஸ்தம்பித்தது

எனினும் ஒரு நல்ல கான்சலான டைபீரியன் கயாஸ் என்பவன் நிலசீர்திருத்தத்தை செய்தான், பிரபுக்கள் நிலங்களை வீரர்களுக்கு பகிர்ந்தளிக்க தீர்மானித்தான்

முதல் நிலசீர்திருத்தம் இதுதான் கி.மு 100 வாக்கில் அதை செய்தான் கயாஸ்

ஆனால் நிலம் என்பது சொந்தங்களையும் பகையாளியாக்கும், சாதாரண மனிதனையும் பேராசைக்காரனாக்கும் மாபெரும் விஷம் அல்லவா? எவ்வளவு போர்களும் அழிவுகளும் பாரத காலத்திலிருந்து ஹிட்லர் காலம் வரை நடந்திருகின்றது?

அப்படிபட்ட நிலத்தை பிரபுக்கள் விடுவார்களா? டைபீரியன் கயஸையும் அவனை சேர்ந்தவர்களையும் கொன்றேவிட்டார்கள்

கான்சலின் நில சீர்திருத்தம் நிலத்திலே புதைக்கபட்டது

இப்பொழுது நாட்டில் சிக்கல் ஒருபக்கம் அடுத்த கான்சல் யார் என்பது, இன்னொரு பக்கம் வீரர்கள் ஸ்ட்ரைக்

யார் ஸ்ட்ரைக் செய்தாலும் நாடு தாங்கும் , ராணுவம் செய்தால் தாங்குமா? ரோமில் ராணுவம் ஸ்ட்ரைக் என்பதால் இத்தாலிய மலைவாழ் குடி, அடங்கிகிடந்த எதிரிகள் எல்லாம் போர்கொடி தூக்கியாயிற்று

சீசர் நடப்பதை கவனித்துகொண்டிருந்தான், பாம்பே கன கச்சிதமாக வாய்ப்புக்கு காத்து கொண்டிருந்தான்

இந்நிலையில் புதிய கான்சலாக அவர்களின் பெரும் மாவீரனான, சீசரின் முன்னோடியான மாரியஸ் கயஸ் கான்சலாக வந்தான், அதில் சல்லா என்பவனும் இடம் பிடித்தான், நிலமையினை ஓரளவு கட்டுக்குள் கொண்டுவந்தனர் இருவரும்

பாம்பேக்கு புது சிக்கல் முளைத்தது, தான் ஆளநினைத்த ரோமை புதுகான்சல்கள் ஆள்வது அவனின் ஆத்திரத்தை அதிகபடுத்தியது, ஆனால் காட்டிகொள்ளவில்லை வாய்ப்புக்காக காத்திருந்தான்

சல்லா பிரபுக்களின் பிரதிநிதி, மலைவாசிகளுக்கு சில உரிமைகள் கொடுத்து நிலமையினை சாதமாக்கி இருந்தான், கயஸுக்கும் சல்லாவுக்கும் பொருந்தாது

இதில் சிரித்தான் பாம்பே, இருவரையும் மோதவிட்டு அழிதுவிட்டால் நமக்கு சிக்கல் சீசர்தான், சீசரை கைக்குள் போட என்ன செய்யலாம்?

மிக நுட்பமாக திட்டமிட்ட பாம்பே ஜூலியஸ் சீசரின் மகளை மணந்துகொண்டான், இத்திருமணத்தின் மூலம் எந்நாளும் சீசர் தனக்கு அடிமை என கணக்கிட்டான்

தன் மகள் மகராணி ஆக எந்த தகப்பன் தடையாக இருப்பான் எனும் பெரும் கணக்கு அது, அதே நேரம் பாம்ப்யேயின் உயிருக்கும் உத்திரவாதம் உண்டு

பாம்பேயின் கணக்கு இப்படி இருக்க, அங்கே கயஸுக்கும் சல்லாவுக்கும் யுத்தம் தொடங்கியது

ஒரு கட்டத்தில் ஆப்ரிக்காவுக்கு விரட்டபட்டான் கயஸ், சல்லாவின் அணியிலே சீசரும் பாம்பேயும் இருந்தார்கள்

இந்நிலையில் நாட்டை விஸ்தரிகின்றேன் என சல்லா ஆசியா பக்கம் நகர ரோம் காலியாயிற்று

இதனை கணித்த கயஸ் பெரும் படையுடன் வந்து நானே அரசன் என ஜனநாயக கட்சியான சல்லாவின் கட்சியினை கலைத்துவிட்டு கிமு 81ல் அரசன் ஆனான்

கான்சல் பதவி காலாவதியாகி மறுபடி ரோம் முடியாட்சி ஆனது

விஷயம் எங்கோ சண்டையிட்ட சல்லாவிற்கு தெரிந்து படையோடு வந்தான், அவன் படையிலேதான் சீசரும் பாம்பேயும் இருந்தனர்

நிலசீர்திருத்தம் செய்தில் கயஸை விட சல்லா கெட்டிகாரன் என்பதாலும், இப்பொழுது கயஸ் தன்னை மன்னனாக அறிவித்ததாலும் சீசரும் பாம்பேயும் கடும் கோபத்தில் இருந்தனர்

கடும் யுத்தம் தொடங்கிற்று, சீசரின் படையள் கயஸை வென்றன, கயஸை கொன்றான் சல்லா

சல்லா கிமு 80களில் ஆட்சிக்கு வந்தான், அவன் அரசனாக முடி சூட்டவில்லை, சூட்டியிருந்தால் கயஸை போல் ஆகியிருப்போம் என்பதால் ஒருமாதிரியான சர்வாதிகார ஜனநாயக செய்துவந்தான் திமுகவில் கலைஞர் குடும்பம் போல‌

பாம்பே மேல் சல்லாவிற்கு பெரும் அபிமானம் இருந்தது, பாம்பே இளம்வயது , சீசரோ மூத்தவர். பாம்பே சல்லாவின் நம்பிக்கைகுரிய தளபதியானான்

ஆனால் பாம்பே பாம்பு போல விஷம் கக்க காலம் பார்த்திருந்தான், டைபீரியன் கயாஸை வீழ்த்தி இந்த கயாஸை வீழ்த்தியது போல் சல்லாவுக்கும் நாள் குறிக்க காத்திருந்தான்

இந்நிலையில்தான் புது சிக்கல் முளைத்தது கவுல் எனப்படும் இன்றைய மேற்கு இத்தாலி, பிரான்ஸ் பகுதிகளில் ஒரு கோஷ்டி யுத்தமுரசு கொட்டியது

மிக மிரட்டலாக உருவெடுத்தார்கள், அவர்களால் எந்நேரமும் ரோமுக்கு ஆபத்து இருந்தது

வேறு என்ன? யுத்தம் தொடங்கிற்று

நமது தமிழ்நாட்டு ராமசந்திரனுக்கு அவர் திரையுலகில் அடையாளமிடும்பொழுது வயது 42க்கு மேல் என்றார்கள், அவர் ஜாதாகம் அப்படி

ஜூலியஸ் சீசருக்கும் அப்படியே, 40 வயதை தாண்டி இருந்த சீசர் எவ்வளவு பெரும் மாவீரன் என்பதை கவுல் யுத்தமே தீர்மானித்தது

அவனின் ராணுவ வியூகமும், வேகமாக படை நகர்த்தும் தந்திரமும், நுட்ப மதியும் அந்த இடத்தில்தான் தெரிந்தது

நல்லவேளையாக இவர் மகளை மணமுடித்தோம் இல்லை என்றால் தன் கனவு என்னாவது என பாம்பேயே வாயடைத்து நின்றான்

தான் யாரென நிரூபிக்க காவுல் யுத்தகளம் நோக்கி புறப்பட்டான் சீஸர், சீசர் எனும் ராட்சசன் உருவாக தொடங்கினான்

(தொடரும்…)