லலித்மோடி பற்றி தகவலே இல்லை

இந்திய அரசு தேடுவதாக சொல்லும் லலித்மோடி பற்றி தகவலே இல்லை, விஜய் மல்லையா ஆம் இதோ லண்டனில்தான் இருக்கின்றேன் என ஹாயாக மல்லாக்க கிடக்கின்றார், அவரை கொண்டுவர இந்தியாவால் முடியவில்லை

இந்நிலையில் நீரவ் மோடி ஹாங்காங்கில் இருக்கின்றாராம், அவரை தூக்க சீன அரசு அனுமதி வேண்டும்

சீனா உடனே விட்டுவிடும் நாடா? அது அரசியலை ஆரம்பித்துவிட்டது

அவரை தருவோம் ஆனால் அதற்கு முன் சில விஷயம் பேசவேண்டும் என்கின்றது?

என்ன பேசும் என்பது யூகிக்க கூடிய விஷயம்

இந்த தலாய்லாமா என்பவரை இந்திய நடை ஏற்றமாட்டேன் என சத்தியம் செய்துகொடுங்கள், உடனே நீரவ் மோடியினை கொடுக்கின்றேன் என பேரம் பேசும் சீனா

இனி நீரவ்மோடி வருவார் என நினைக்கின்றீர்கள்?

மல்லையா, நீரவ் எல்லாம் சிறந்த வியாபாரிகள் மட்டுமல்ல, உலக நிலவரமும் அறிந்தவர்கள். எங்கு தங்கினால் இந்திய ஆட்டம் செல்லாதோ அங்கு பத்திரமாக செட்டில் ஆகிவிட்டவர்கள்