லாட்டரி சீட்டு மோகம் மறுபடியும் தமிழ்நாட்டில் ஒரு உயிரை கொன்றிருக்கின்றது

லாட்டரி சீட்டு மோகம் மறுபடியும் தமிழ்நாட்டில் ஒரு உயிரை கொன்றிருக்கின்றது, விழித்து கொண்ட அரசு லாட்டரி இங்கு மறைமுகமாக நடத்தபடுவதை அறிந்து ஏதோ செய்கின்றது

ஆக இன்னமும் லாட்டரி நடமாடுகின்றது, மறைமுகமாக பல உயிர்களை கொல்கின்றது

லாட்டரியும், கள்ள லாட்டரியும் உச்சத்தில் இருந்து, அந்த பணத்தில் கருணாநிதினையே வசனம் எழுத வைத்த காட்சிகள் எல்லாம் இங்கு நடந்தன‌

ஜெயலலிதா மகா துணிச்சலாக அதை சட்டம் போட்டு தடுத்தார், இப்பொழுது மறைமுகமாக இருந்தால் அதுவும் ஒழிக்கபட வேண்டியதே

லாட்டரி சீட்டின் தொடக்க அறிமுக புள்ளி திமுக, அண்ணா காலத்தில் அது அறிமுகமான பொழுதே விமர்சனங்கள் வந்தன எதிர்ப்புகள் கிளம்பின‌

மது வேண்டாம் என மறுத்த அண்ணா, லாட்டரியினை கையில் எடுத்தார், இது பல குடும்பங்களை ஒழிக்கும் விஷயம் என சொன்னாலும் அவர் கேட்கவில்லை, லாட்டரியால் என்ன லாபம் என்பதை தனக்கே உரிய விஷ வார்த்தையில் சொன்னார்

“விழுந்தால் வீட்டுக்கு, விழாவிட்டால் நாட்டுக்கு”

அவ்வளவுதான் , உடனே பேரறிஞர் என உபிக்கள் கொண்டாடின, அட அதனால் பிணம் விழுந்தாலும் வீட்டுக்கும் நாட்டுக்கும் இழப்பல்லவா? என கேட்டாலும் , உபிக்கள் அதையும் சேர்த்துத்தான் அண்ணா சொன்னார், அவரின் அறிவே அறிவு என கண்களை துடைத்து கொண்டன.

இன்னும் உபிக்கள் அன்றும் அப்படித்தான் இன்னமும் திருந்தவில்லை

இன்று முக ஸ்டாலினின் உளறலுக்கே முட்டுகொடுக்கும் உபிக்கள், அண்ணாவின் இம்மாதிரியான புரியா வார்த்தை ஜாலங்களுக்கு எவ்வளவு முட்டு கொடுத்திருக்கும்?