லிடியன் நாதஸ்வரம்

இசைதுறையில் மிக பெரும் பங்களிப்பினை கொடுப்பதால் சென்னை சிறந்த கலாச்சார நகரமாக யுனெஸ்கோவினால் ஏற்கனவே அறிவிக்கபட்டது

எத்தனை பெரும் இசை சக்கரவர்த்திகள் வாழ்ந்த பூமி இது, அக்காலம் முதல் எம்.எஸ் சுப்புலட்சுமி காலம், இளையராஜா காலம், ரகுமான் காலம் என அது மிகபெரும் அடையாளத்தை கொடுத்துகொண்டிருக்கின்றது

அப்படி கொடுத்த சென்னை ஒரு பால்ய இசை மேதையினையும் உலகிற்கு கொடுத்து தன் பெருமையினை தக்க வைத்திருக்கின்றது

அந்த சிறுவனின் பெயர் லிடியன், சென்னை பையன் இன்னும் 14 வயது கூட பூர்த்தியாகவில்லை

ஆனால் அமெரிக்காவில் நடந்த பியாணோ இசைக்கும் போட்டியில் அனாசயமாக முதல் பரிசான 7 கோடியினை தட்டி வந்துவிட்டான்

பியாணோ இசை எங்கள் சொத்து என சொன்ன மேற்குலகம் அந்த சிறுவனிடம் மண்டியிட்டு பரிசை கொடுத்திருக்கின்றது

ஏ.ஆர் ரகுமானை மொசார்ட் ஆப் மெட்ராஸ் என அழைத்தனர் லண்டன்வாசிகள்

இதோ ஜூனியர் ஒருவரும் வந்துவிட்டார்

இந்த சிறுவனிடம் மொசார்ட் மற்றும் பீத்தோவனின் சாயல் இருப்பதாக ஐரோப்பிய பத்திரிகைகளே எழுத தொடங்கிவிட்டது

பயிற்சியால் வரும் அறிவு வேறு, இயல்பாய் வரும் திறமை வேறு

அது ஒரு சிலருக்கே வாய்க்கும், வாய்த்தது மட்டுமல்ல அதை தகுந்த வழியில் வெளிப்படுத்த உரிய வாய்ப்புகளும் வேண்டும்

இது ஒழுங்க அமைந்தோரே வெல்வர்

அப்படி இச்சிறுவனுக்கும் எல்லா வாய்ப்பும் திறமையும் அமைந்திருக்கின்றது , லிடியன் நாதஸ்வரம் நிச்சயம் பெரும் உயரம் எட்டுவார், எட்ட வேண்டும்.

இசை தமிழ் என ஒன்றை வைத்து இசைபட வாழ்ந்த தமிழனின் குணம் அவனுக்கும் இருக்கும் அல்லவா?