லிபிய யுத்தம் விஸ்வரூபமெடுக்கின்றது

சிரியாவில் யுத்தம் ஒரு கட்டுபாட்டுக்கு வந்த நிலையில் லிபிய யுத்தம் விஸ்வரூபமெடுக்கின்றது

நல்லாட்சியும் பொற்காலமும் கொடுத்த மூமர் கடாபியினை அடித்து வீழ்த்தியதில் இருந்து லிபியாவில் குழப்பம் தொடங்கியது

அமெரிக்க கூட்டணி ஒருபக்கம், ரஷ்ய அணி ஒரு பக்கமும் இருந்து ஆடுகின்றன. ரஷ்ய அணியில் துருக்கியும் உண்டு

எகிப்தின் அடுத்திருக்கும் லிபியா எனும் பாலைவன நாட்டில் என்ன சிக்கல்? எண்ணை இருப்புதான் சிக்கல்

அந்த எண்ணை இருந்தால் அமெரிக்கா வரும் அது வந்தால் அரசியல் வரும் இன்னும் ஏராளம் வரும், அதற்கும் மேல் கடாபிக்கு இருந்த நாட்டாமை ஆசை

இப்பொழுது லிபியா கரகாரட்டகாரன் படத்தில் வரும் கார் போல யார் கட்டுபாட்டில் இருக்கின்றது என்பது யாருக்குமே தெரியவில்லை

இந்நிலையில் துருக்கியின் ஆளில்லா விமானத்தை அமெரிக்க உதவி குழு சுட்டு வீழ்த்தி அதிர வைத்திருக்கின்றது

அக்குழு அமெரிக்க ஆதரவுடன் இருப்பதாலும் லிபிய ராணுவத்திலிருந்து வந்ததாலும் தீவிரவாத இயக்கமென்றாலும் விமானம் எல்லாம் வைத்திருக்கின்றது

முப்படைகளும் கொண்ட இயக்கம் எனும் பெருமையினை வைத்திருந்த புலிகளோடு இந்த லிபிய இயக்கமும் அப்பெருமையினை பங்கு போட்டு கொள்கின்றது

இந்நிலையில் சர்வதேச கூலிபடையினை தந்திரமாக உள்ளே அனுப்புகின்றது ரஷ்யா

அதாவது கூலிப்படை என்பது தமிழகத்தில்தான் உண்டு காசு கொடுத்தால் கொலை செய்வார்கள் என நினைக்க வேண்டாம், அது உலக நாடுகள் எல்லாவற்றிலும் உண்டு அந்த கூலிபடைக்கு யூனிபார்ம் போட்டு துப்பாக்கி பயிற்சி எல்லாம் கொடுத்து சில நிறுவணங்கள் தயாராக இருக்கும்

அந்த நிறுவணங்களை சம்பந்தபட்ட நாடுகள் அணுகினால் உடனே ஆள் அனுப்பிவிட்டு பெரும் தொகை வசூல் செய்வார்கள்

இது எல்லா காலத்திலும் இருந்தது, வெள்ளையன் காலத்தில் சில மராட்டிய கூலிபடைகள் இப்படி ஆற்காட்டு நவாபுக்காக வந்தது

மராட்டிய படை என்ன? ராபர்ட் கிளைவே கிழக்கிந்திய கம்பெனியின் கூலிபடை தலைவனாகத்தானே யுத்தம் நடத்தி பின் இந்தியாவினை பிடித்தான்

அந்த கூலிபடை ஒன்றை லிபியாவில் களமிறக்கிவிட்டது ரஷ்யா, இப்பொழுது பெரும் குழப்பமும் சண்டையும் மூண்டாயிற்று

இன்றைய சிங்கப்பூர் போல கடாபி காலத்தில் செழிப்பாக இருந்த லிபியா இன்று சிரியா போல் சீரழிந்துவிட்டது

சரி இந்த இடத்தில் ஒரு சந்தேகம் வரலாம்

சர்வதேச கூலிபடை இருப்பதை புலிகள் ஏன் பயன்படுத்தவில்லை, பயன்படுத்தினால் ஈழம் எளிதாக கிடைத்திருக்குமே?

கூலிபடைகள் அழைத்தால் வரும்தான் ஆனால் சம்பந்தபட்ட கம்பெனியினை வல்லரசுகள் அனுமதிக்க வேண்டும் இல்லாவிட்டால் வராது

இலங்கையில் அதுதான் நடந்தது இதனால் கூலிபடை இலங்கைக்கு வரமுடியவில்லை இதனால் புலிகளே தங்களுக்கு ஒரு கூலிபடையினை தமிழ்நாட்டில் உருவாக்கினர்

காசு கொடுத்தால் வாயிலே குண்டு போடும் வீரர்கள் இங்கு மட்டும்தான் உண்டு, அப்படி ஒரு வாய்படை உருவாயிற்று

அவை வாயால் குண்டு போட்டுகொண்டே இருந்தன, இதுகளை வைத்து என்ன செய்வது என தவித்த புலிகள் ஒரு கட்டத்தில் அழிந்தே போயினர்