வங்கத்து தாகூர், தமிழகத்து பாரதி

இங்கு பாஞ்சாலங்குறிச்சி கோட்டையும், வேலூர் கோட்டையும் இன்ன பல கோட்டைகள் எல்லாம் அழிந்து கிடக்கும்

ஆனால் பத்மநாபபுரம் உள்ளிட்ட பல அரண்மனைகள் அப்படியே இருக்கும்

எப்படி என்றால், யாரெல்லாம் வெள்ளையனை ஆதரித்தார்களோ அவர்கள் எல்லாம் வாழ்வை கொண்டாட அனுமதிக்கபட்டார்கள். யாரெல்லாம் வெள்ளையனை எதிர்த்தார்களோ அவர்கள் எல்லாம் சிதறடிக்கபட்டனர், ஓட விரட்டபட்டனர்

அதில் கவிஞர்களும் விதிவிலக்கு அல்ல‌

வங்கத்து தாகூர் அப்படித்தான் கொண்டாடபட்டார், தமிழகத்து பாரதி அப்படித்தான் விரட்டபட்டார்

தாகூர் பெரும் கவிஞர் சந்தேகமில்லை. வங்கத்து கவி உள்ளம் அவரிடமும் இருந்தது. ஆனால் சுத்த வெள்ளையன் ஆதரவு

வங்கம் பிரிக்கபடும்வரை அவர் எந்த எதிப்பினையும் தெரிவிக்கவில்லை, வங்கம் பிளவுபட்டபொழுது பொங்கினார்

ஆனால் உலகெல்லாம் அவருக்கு பெரும் வரவேற்பு இருந்தது. அவரின் கவிதைகள் ஆன்மாவினை தொட்டன . உச்சமாக நோபல் பரிசுவரை வழங்கபட்டது

வாழும்பொழுதே கொண்டாடபட்ட பெரும் கவிஞன்

இப்படிபட்ட கவிஞன் பெரும் அடையாளமாக திகழ்ந்தவன் இந்நாட்டிற்கு குரல் கொடுத்தானா என்றால் இல்லை, மாறாக ஜார்ஜ் மன்னர் வரும்பொழுது அவருக்கு வரவேற்பு பாடல் எழுதினான்

30 நிமிடம் ஓடகூடிய அந்தபாடல்தான் இன்று சுருக்கபட்டு தேசிய கீதம்

ஜார்ஜ மன்னன் இந்தியா வந்தபொழுது இங்கு பெரும் பஞ்சம், பலகோடி பேர் செத்தனர். வாஞ்சிநாதன் துப்பாக்கி ஏந்திய காலம்

இந்தியர் செத்துகொண்டிருக்க மும்பையில் அவருக்கு மிகபெரும் வரவேற்பு வாசல் கட்டபட்டது, இன்று இந்தியா கேட் என அழைக்கபடும் அந்த வாசல் அன்றே ஜார்ஜ் மன்னனுக்காக கட்டபட்டது

இந்தியா அலறிகொண்டிருக்க, அவருக்கு வரவேற்பு பாடல் எழுதியவர் தாகூர்

அந்த தாகூரின் செயல் ஒரு நாளும் மறக்க முடியாத துரோகம்

இங்கு ஏகபட்ட குளறுபடிகள் உண்டு. தேசிய கீதமாக அறிவிக்கபடவேண்டியது நிச்சயம் பாரதியாரின் பாடல். அதுதான் மகா பொருத்தமானது

ஆனால் வட இந்திய ஆதிக்கமும், வங்காளிகளின் அட்டகாசமும் இந்த அடிமை சாசனத்தை தேசிய கீதமாக்கின‌

தமிழகத்து ராஜாஜி, காமராஜர் இன்ன்பிற அடையாளங்கள் எல்லாம் பாரதியினை இந்திய அளவிற்கு கொண்டு சென்றார்களா என்றால் இல்லை

ஆனால் வங்காளி இந்தியா முழுக்க கொண்டாட வழிவகை செய்யபட்டான்

இந்த ஒருமாதிரி போக்குத்தான் இம்மாநிலத்தில் திராவிட குரலாய் ஒலித்தது, ஜெயித்தது

தாகூர் ஒரு சந்தர்பவாதி அவனி ஜார்ஜ் மன்னர் வரவேற்ற நம் தேசிய கீதத்தையும், வங்க தேசிய கீதமும் பல முரண்பாடு கொண்டவை

இந்தியாவின் அடிமைசாசன பாடல்தான் இப்படி இருந்ததே தவிர, வங்கத்தை பற்றி அட்டகாசமாக எழுதியிருக்கின்றார் தாகூர்

இன்றும் வங்கதேசத்தின் தேசிய கீதம் தாகூருடையது, உலகிலே இரு நாட்டிற்கு தேசிய கீதம் எழுதிய ஒரே நபர் தாகூர்

தாகூர் மகா கவிஞனாக இருக்கட்டும், ஆனால் சுயநல்ம் மிகுந்திருந்தது, நாட்டுபற்று என்பது இல்லை

பாரதிக்கு கொஞ்சமும் சுயநலமில்லை, இந்நாட்டிற்காக தன்னால் எதை எல்லாம் இழக்கமுடியுமோ அவ்வளவையும் இழந்துவிட்டு அபலையாக மரித்தான்

அவன் மட்டும் வெள்ளையனை ஆதரித்திருந்தால் இன்று உலகபெரும் கவியாக என்னவெல்லாமோ விருது வழங்கி மாபெரும் கவிஞனாக்கி இருப்பார்கள்,

ஏன் அவன் சந்ததி கூட 4 மில்களோடு தென்னகத்தை ஆண்டுகொண்டிருக்கும். பாரதி இத்தேசத்திற்கு இழந்தது ஏராளம்

கொஞ்சமும் அசையவிலை பாரதி

இதில் தாகூர் என்ன இழந்தார் என சொல்லமுடியுமா? பெற்றார், நிரம்ப பெற்றார்

இன்று தாகூரின் பிறந்தநாள் என கொண்டாடுவார்கள்

ஆனால் தேசிய கவிஞராகவோ, தேசிய கீதம் எழுதியவன் என்றோ அவனை ஏற்க முடியாது

எங்கள் எட்டயபுரத்து பாரதியுடன் ஒப்பிடும்பொழுது அவன் வீட்டு அருகே கூட வருவதற்கு தாகூருக்கு தகுதி இல்லை

இத்தேசத்தில் மாற்றவேண்டிய விஷயம் உண்டென்றால் அந்த அடிமை வாக்குமூல கவிதையான ஜனகண மன என்பதை மாற்றி எம் பாரதியின் பாடலான வந்தே மாதரம் என்போம் என்பதையோ, தாயின் மணிக்கொடி பாரீர் என்பதையோ அறிவிக்க வேண்டும்

தாகூர் நல்ல கவிஞன், பல பரிசுகளை வென்ற கவிஞன். ஆனால் இந்நாட்டுகாக அவர் எதனையும் செய்யவில்லை, செய்ய விரும்பவுமில்லை

அவ்விஷயத்தில் என்றுமே பாரதி தாகூரை விட பலமடங்கு உயர்ந்து ஓளிவீசிகொண்டே இருப்பான்

வெள்ளையனுக்கு பணிந்து நிலைத்து நிற்கும் அழகு அரண்மனைகளை விட, பாஞ்சாலங்குறிச்சியின் அழிந்த கோட்டைக்கு சிறப்பு அதிகம்

அவ்வாறே வெள்ளையனுக்கு அடிபணிந்த வங்கத்து தாகூரை விட எம் நெல்லை சிங்கத்துக்கு பெருமை அதிகம்..