வடகொரிய அதிபரும் டிரம்பும் பேச்சுவார்த்தை
வடகொரிய அதிபரும் டிரம்பும் பேச்சுவார்த்தை நடத்தும் காலம் வருகின்றது, அதற்கு முன்பு வடகொரியாவிற்கு நம்பிக்கை அளிக்கவேண்டும் அல்லவா?
இதனால் அமெரிக்க உளவுதுறை தலைவரே மிக தைரியமாக வடகொரியா சென்று அதிபரை சந்தித்திருகின்றார் என்கின்றன செய்திகள்
இது மிக மிக சவலானது, அதிகார்வபூர்வ பயணமில்லை என்பதால், ஏதும் ஆத்திரத்தில் வெள்ளைதக்காளி சுட்டு போட்டிருந்தால் கூட விஷயம் வெளிவராது
ஆனாலும் மிக சவால் எடுத்து சென்று பார்த்துவிட்டு வந்திருக்கின்றார் சி.ஐ.ஏ தலைவர் மைக் பாபியோ
வடகொரிய உளவுதுறையும் உலகெல்லாம் இயங்குகின்றது, சில நாடுகள் வடகொரிய மக்களையே நுழைய தடை செய்திருக்கின்றன
எப்படியோ வடகொரிய உளவுதுறையின் உதவியோடு இச்சந்திப்ப்பு ரகசியமாக நடந்திருக்கின்றது என்கின்றன செய்திகள்
சிங்கத்தை அதன் குகையிலே சந்தித்து திரும்பிய சி.ஐ.ஏ தலைவரின் செயல்பாடு உலகின் கவனத்தை பெற்றிருகின்றது
ஆனால் அவரோ சென்றேன் என சொல்லவுமில்லை அதே நேரம் செல்லவில்லை எனவும் சொல்லவில்லை.
உளவுதுறை என்பது அதுதான்