வடகொரிய அதிபரும் டிரம்பும்
இங்கு தமிழிசையும் முக ஸ்டாலினும், கமலஹாசனும் திமுகவும் மோதிகொண்டிருப்பது போல அடிக்கடி அறிக்கை போர் நடத்திகொண்டிருக்கும் வடகொரிய அதிபரும் டிரம்பும் மறுபடியும் சந்திக்க போகின்றார்கள்
ஒரு அரசியல் கூட்டம் நடக்கும்பொழுது அவர்கள் சந்திக்கும் இடம் மகா முக்கியம்
முதலில் சிங்கப்பூரில் சந்தித்தார்கள் அது மேற்கத்திய ஆதரவு நாடு
இப்பொழுது வியட்நாமில் சந்திக்கின்றார்கள், வியட்நாம் வித்தியாசமான நாடு, ஒரு காலத்தில் சீன ரஷ்ய ஆதரவுடன் அமெரிக்காவினை விரட்டி அடித்தார்கள்
உலகில் அமெரிக்கபடைகள் தோற்ற வெகுசில இடங்களில் வியட்நாமும் ஒன்று
இப்பொழுது சீனாவுடன் உரசுகின்றார்கள். உலகிலே சீனாவினை அசால்ட்டாக எதிர்க்கும் நாடு வியட்நாம், இதனால் இந்தியா பிரம்மோஸ் ஏவுகனை எல்லாம் கொடுத்து தயாராக வைத்திருக்கின்றது
அப்படிபட்ட வியட்நாமில் மறுபடியும் டிரம்பும் கிம்மும் சந்திகின்றார்கள், இன்னும் வடகொரியா மேலான தடை அகற்றபடா நிலையில் டிரம்பின் மிரட்டல் தொணி கொஞ்சம் குறைந்து முணுமுணுப்புக்கு வந்திருக்கின்றது
அதாவது வடகொரியா அணுஆயுதம் வைப்பதை தடுக்கவில்லை எனும் அளவிற்கு அய்யன் இறங்கியிருக்கின்றார்
ஏன் இந்த மாற்றம்?
தென் கொரியாவினை வளர்த்தது போல வடகொரியாவினை வளர்த்து சீனாவுக்கு எதிராக கொம்பு சீவும் திட்டம் இருக்குமோ?
ஒரு காலத்தில் பெரும் எதிரியும் பெரும் அவமானமும் கொடுத்த வியட்நாமே இன்று அமெரிக்காவுடன் நட்பாக இருந்து சீனாவினை எதிர்ப்பது போல, வடகொரியாவினை வளைக்கும் தந்திரமும் இருக்குமோ?
பாமக அதிமுகவுன் இணைந்தது போல லோக்கல் அரசியலிலே அதிசயம் நடக்கும் பொழுது சர்வதேச அரசியலில் நடக்காதா?
வியட்நாம் தேர்ந்தெடுக்கபட்ட ரகசியம் இதுதான் என்கின்றார்கள்
இப்பொழுதெல்லாம் அரசியல் கூட்டணி என்றால் பிரமாண்ட விருந்துடனேதான் நடக்க வேண்டுமாம்
அதற்கு தைலாபுரம் தோட்டமோ வியட்நாமிய ஸ்டார் ஹோட்டலோ விதிவிலக்கல்ல
இருபெரும் அழிச்சாட்டிய தலைவர்களுக்கு பெரும் விருந்து பிப்ரவரி 27க்காக தயாராகின்றது
ஒபாமாவுடன் நான் டெலிபோனில் எப்பொழுதும் பேசுவேன் என முன்பு சொன்னார் அன்புமணி
பாவம் டிரம்ப், அன்புமணியுடன் அவருக்கு நல்ல உறவு இல்லாததால் தைலாபுரத்து ஸ்பெஷல் டிஷ் வியட்நாமிய விருந்தில் மிஸ்ஸிங்..