வடகொரிய ரவுடி என்னவெல்லாம் ஆட்டம் காட்ட போகின்றாரோ?
உலக தலைவர்கள் எல்லோரும் புத்தாண்டு வாழ்த்துக்களை சம்பிரதாயமாக சொல்லிகொண்டிருந்தனர், உலகம் முழுக்க அன்பு மகிழ்ச்சி சகோதரத்துவம் தளைக்க, மானிடம் செழிக்க பசி ஒழிய , உலகமெல்லாம் சுபீட்சம் பெருக.. என இந்த அண்ணாதுரை பாணியில் வாழ்த்திகொண்டிருந்தனர்.
அப்பொழுது மன்சூர் அலிகான் பாணியில் ” டேய் ஒரு பயலும் வாழமுடியாது, எல்லோரும் இந்த வருஷத்தோட சாக போறீங்கடா..யாரும் பார்க்காத அணுகுண்டு செய்ய போறேன்” என மிரட்ட தொடங்கிவிட்டார் வடகொரிய அதிபர்
இந்த டிரம்ப் தன்னை காமெடியானாக நினைத்து ஏதோ விளையாடுகின்றார் என உணர்ந்து ஆத்திரபட்ட வடகொரியா மறுபடியும் நீண்ட தூர ஏவுகனை மற்றும் அணுகுண்டு செய்ய தயாராகும் என அறிவித்தது அமெரிக்காவுக்கு அதிர்ச்சி
டிரம்போ சத்தியராஜ் பாணியில் “அட இந்த குண்டன் காமெடியன் இல்லியாட்டும் போலிருக்குது , நெசமாவா?” என முறைத்துகொண்டிருக்கின்றார்
இனி வேதாளம் முருங்கை மரம் ஏறும், விக்ரமாதித்தனாக அமெரிக்கா பல காரியங்களை செய்யும்
ஆனால் டிரம்போ முருங்கை மரம் இருந்தால்தானே வேதாளம் ஏறும், அதையே வெட்டிவிட்டால் வேதாளம் எங்கே செல்லும் என பார்த்துவிடலாம் எனும் முடிவிலிருப்பதாக செய்திகள் சொல்கின்றன
எனினும் டிரம்பின் அவரச மற்றும் முதல் காரியம் ஈரான் என்பதால் வடகொரியாவுக்கு காலம் இருக்கின்றது, அதற்குள் வடகொரிய ரவுடி என்னவெல்லாம் ஆட்டம் காட்ட போகின்றாரோ?

பார்க்கலாம்..