வடக்கு வாழ்கிறது , தெற்கு தேய்கின்றது
சென்னையில் இருந்து கொண்டு இந்தியா தமிழருக்கு என்ன செய்தது என கேட்பவர்கள் உண்டு, பல குரல்கள் ஒலிக்கும்
வடக்கு வாழ்கிறது , தெற்கு தேய்கின்றது என்ற அந்த ரைமிங்கான குரல்களின் தொடர்ச்சி இது
உண்மையில் இந்தியா தமிழருக்கு என்ன செய்ததோ இல்லையோ, வட இந்திய கிராமங்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை, இன்று காங்கிரசிற்கு வடக்கே ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சிக்கு அதுதான் காரணம்
காங்கிரஸ் என்றல்ல, ஜனதா, ராஷ்டிரிய ஜனதா, பிஜூ ஜனதா, கன்ஷிராம் கட்சி எலலம் அப்படித்தான், பின்னாளில் பாஜகவும் மாட்டை மட்டும் கவனித்தால்
இந்த வீழ்ச்சியினை சந்திக்கும்
காரணம் அவர்கள் இன்னும் அடிப்படை வசதிகளை கூட முழுமையாக பெறவில்லை, தேற்கே வெள்ளையன் நல்ல அஸ்திவாரம் கொடுத்துவிட்டு சென்றான், வடக்கே அப்படி அல்ல
அவர்களுக்கு செய்ய வெண்டிய காரியங்கள் ஏராளம், சாலை முதல் பள்ளிவரை அவர்கள் சந்திக்க வேண்டிய சவால்கள் ஏராளம், இன்றைய உலகிற்குள் அவர்கள் வரவே இல்லை, இன்னும் அடியெடுத்து வைக்கவே இல்லை
அவர்கள் ஒரளவு எழும்பி வரவே இன்னும் பல ஆண்டுகள் ஆகும் போலிருக்கின்றது, தெற்கே படையெடுக்கும் தொழிலாளர்கள் அதற்கு சாட்சி
இன்று சில இடங்களில் பன்னாட்டு பத்திரிகைகள் அவர்களை செய்தியாக்குகின்றன
ஆம்புலன்ஸ் இல்லாமல் பிணங்களை சைக்கிளில் கொண்டு சென்றும், சிலர் தலைச்சுமையாக சுமந்து சென்றும் கொண்டிருக்கும் காட்சிகள் உலகின் கவனத்தை ஈர்க்கின்றன
தமிழருக்கு இந்தியா ஒன்றும் செய்யவில்லை என ஒப்பாரி வைப்பவர்கள் உணரவேண்டிய தருணம் இது, இந்தியா வடக்கத்திய மக்களுக்கும் பெரிதாக ஒன்றும் கிழித்துவிடவில்லை, இது மிகபெரும் நாடு இதன் சிக்கல் அப்படி
அங்கே கிராமபுற மருத்துவமனைக்கு வழியின்றி ஓடிவந்து சாகின்றார்கள், செத்தாலும் அவர்களை அடக்கம் செய்ய கூட வழியில்லா வறுமையும் , சோகமும் அவர்கள் நிலை..
பன்னாட்டு செய்தி நிறுவணங்கள் இதனை கண்ணீர் செய்தியாக்குகின்றன, வலி நிறைந்த விஷயம் அது.
அந்த வட இந்தியாவின் அவசர தேவை, கோசாலை அமைப்பதோ மாட்டுக்கு ஆதார் கார்டு கொடுப்பதோ அல்ல, மாறாக ஆம்புலன்ஸ்களோடு கூடிய நல்ல மருத்துவமனை கொடுப்பது
உலகம் கவனிக்கும் இந்த அவமானம் நடுவே, பல நாடுகளுக்கு செல்லும் மோடி இதற்கு தீர்வை கொடுத்துவிட்டு கெத்தாக செல்வது நல்லது,
அல்லது அவர்களிடம் இருந்து கொஞ்சம் ஆம்புலன்ஸை வாங்கி வந்தால் இன்னும் நல்லது