வட இந்தியாவில் பெரியார் வந்துவிட்டார்

வட இந்தியாவில் பெரியார் வந்துவிட்டார், வட இந்தியாவின் முதல் இந்து எதிர்ப்பு குரல் பெரியார் குரல் என ஏக இம்சைகள்

வட இந்திய வரலாறு சொல்வதென்ன?

அங்கு இந்துமதத்துக்கு எதிரான குரல்கள் வருவதும் பின் இந்துமதம் மீண்டெழுவதும் காலம் காலமாக நடக்கும் விஷயம்

புத்தன் அதை செய்தான் இந்து மதம் மீண்டது

மகாவீரன் அதை செய்தான் இந்துமதம் மீண்டது

ஆப்கானியர் செய்தனர் இந்துமதம் மீண்டது

குருநாணக் தனிவழி கண்டார் அவராலும் பஞ்சாபிய எல்லையினை தாண்ட முடியவில்லை அதுவும் ஹரியானா கோஷ்டி தாடி முடி எல்லாம் வெட்டிவிட்டு இந்துவாக திரும்பியது

வெள்ளையனால் இந்துமதத்தை ஒழிக்க அதன் இறுக்கமான பக்கங்களை காட்டி புரட்சியாளன், சாதி மறுப்பாளன் , கறுப்பு சட்டை என யாரையெல்லாமோ மறைந்திருந்து ஏவினான்

அதுவோ ராஜாராம் மோகன்ராய், விவேகானந்தர் என தன்னில் இருந்தே ஞானிகளை கொடுத்து தன்னை சீர்படுத்திற்று

பசுவய்யா போல விவேகானந்தர் போல அன்றிலிருந்தே இந்துமதம் தன் உள் ஞானிகளால் தன்னை சீர்படுத்திற்று, அய்யா வைகுண்டர் தத்துவம் அதுவே

இந்துமதம் சோதனைகளை சந்திப்பதும் அதிலிருந்து மீண்டு மீண்டு உதிப்பதும் காலம் காலமாக நடக்கும் விஷயம் அதுவும் வட இந்தியாவில் அதிகம்

வரலாறு அப்படி இருக்க ஈரோட்டு ராம்சாமி வடக்கே வந்து இந்துமதத்தை முதன் முதலாக அழிக்க கிளம்பிவிட்டான் என்ற குரல்களை கேட்க பரிதாபமாய் இருக்கின்றது.

இவர்களுக்கு வரலாறும் தெரியாது, ஒரு மண்ணும் தெரியாது, ஆனால் எதற்கெடுத்தாலும் ராம்சாமிடோவ் என கிளம்பிவிட வேண்டியது..