வட கொரியா அதிபர் சீனா விஜயம்…
அமெரிக்க உளவுதுறைக்கு சவால் விடும் விஷயம் ஒன்றை வடகொரிய அதிபர் செய்திருக்கின்றார்
இதுவரை பெரும் உளவு தகவல்களை அமெரிக்காவால் வடகொரியாவில் இருந்து பெறமுடியவில்லை, காரணம் வடகொரியாவின் இரும்புதிரை அப்படி
இப்பொழுது சீனாவிற்கு வடகொரிய அதிபர் செல்லலாம் என செய்திகள் வருகின்றன
பொருளாதார தடை இன்னபிற விஷயங்களால் சீனாவால் அவரை பகிரங்கமாக அழைக்க முடியாது என்பதால் ரகசியமாக அழைக்கின்றது என்கின்றார்கள்
பொதுவாக வடகொரிய அதிபர் ஈழத்து பிரபாகரன் போன்றவர் , எங்கும் செல்லமாட்டார்
இப்பொழுது சென்றாக வேண்டிய காரணம் இருப்பதால் செல்கின்றார், அதாவது சிங்கம் குகையினை விட்டு வெளியே வருகின்றது
வேறு நாட்டிற்கு சென்றால் அவரை தூக்கலாம் அல்லது மெல்ல கொல்லும் விஷத்தை தூவலாம் என பல வாய்ப்புகள் இருப்பதால் சீனாவிற்கு நம்பி செல்கின்றார்
அமெரிக்கா சும்மா விடுமா?
சீனாவில் அமெரிக்க உளவாளிகள் இருப்பது ஒன்றும் ரகசியமல்ல, அதனால் சீனா கடும் பாதுகாப்பினை வழங்கி அந்த வெள்ளை தக்காளியினை வரசொல்கின்றது
விமானமா, ரயிலா இல்லை சந்தேகம் வராதபடி சைக்கிளா எதில் வருகின்றார் அவர் என மிக விழிப்பாக சீனாவில் கண்காணிக்கின்றது அமெரிக்க உளவுதுறை
முதல்முறையாக வெளிநாட்டுக்கு செல்லும் வடகொரிய அதிபருக்கு காய்கறி லாரிக்குள் ஒளிந்துசெல்லும் அளவு பரிதாப நிலை வந்திருக்கின்றது