வட கொரியா : என்ன சொன்னார் டிரம்ப்?

வடகொரியா சமாதானத்திற்கு வந்தாலும் அமெரிக்கா இப்பொழுது உச்சாணி கொம்பிற்கு ஏறுகின்றது

தென்கொரிய அமெரிக்க ராணுவபயிற்சி வீம்புக்காக நடைபெறுவதில் வடகொரியா அப்செட், இதனால் பழையபடி ராக்கெட் விடலாமா? அணுகுண்டு வெடிக்கலாமா? என ஆழ்ந்த யோசனைக்கு வந்தாயிற்று

அடுத்தமாதம் நடைபெற வேண்டிய வடகொரிய அமெரிக்க அதிகர்கள் சந்திப்பு கேள்விகுரியாகின்றது

இந்நிலையில் டிரம்ப் என்பவர் தான் அரசியல் அறிவு அற்றவர் என்பதை நிரூபிக்கும் விதமாக பேசியதை தொடர்ந்து சி.ஐ.ஏ தலையில் கை வைத்தபடி அமர்ந்திருக்கின்றது

என்ன சொன்னார் டிரம்ப்?

வடகொரிய அதிபர் அணு ஆயுதத்தை கைவிடாவிட்டால் லிபிய அதிபர் கடாபி போல் கொல்லபடுவார் என பகிரங்கமாக சொல்லிவிட்டார்

இதன் மூலம் அவர் சொல்லியிருப்பது மூன்று விஷயங்கள்

முதலாவது கடாபி அணுகுண்டு செய்ய முயன்றார் இது அமெரிக்காவிற்கு பிடிக்கவில்லை

இரண்டாவது லிபியாவில் நடந்த புரட்சி அமெரிக்கா நடத்தியது, கடாபியினை கொன்றது அமெரிக்கா

மூன்றாவது விஷயம் அதே பாணியில் வடகொரிய மக்களாலே கிம்மை அமெரிக்கா கொல்லும்

இப்படி லிபியாவில் அமெரிக்கா செய்த உள்ளடி வேலைகளையும், வடகொரியாவில் செய்ய இருக்கும் சில ஆப்ரேஷன்களையும் பகிரங்கமாக போட்டு உடைத்துவிட்டார் டிரம்ப்

விஷயத்தை ஊகித்துகொண்ட வடகொரியா ஒரு மாதிரி பெருமூச்சுடன் யோசனையில் தீவிரமாக இறங்கியாயிற்று

அணைந்த நெருப்பு மறுபடி பற்றி எரிய தொடங்குகின்றது