வதம் என்றொரு தமிழ் திரைப்படம்…
https://youtu.be/Q3I2kSMjOIc
வதம் என்றொரு படத்தின் டிரெயிலர் பார்க்க முடிந்தது,
நெல்லை மாவட்டத்து கொலை சரித்திரத்தை, சாதி பெயரால் நடந்த கொடூர காலங்களை ஏதோ சூரபத்மன் கதை போல எடுத்திருக்கின்றார்கள் என்பது தெரிகின்றது,
அப்பகுதியினை கலங்க வைத்த, செல்வின் கட்டதுரை பாத்திரங்களை அப்படியே வைத்திருக்கின்றார்கள்
படம் வந்ததா இல்லையா என தெரியவில்லை ஆனால் ஆனால் தென்மாவட்டங்களின் அமைதியினை இம்மாதிரி படங்கள் அசைத்துபார்க்கும் என்பதில் சந்தேகமே இல்லை..
படம் வசூலாகுமா என்பது தெரியாது, ஆனால் சில பல தலைகளை வாங்காத வரை நல்லது
சில படங்களுக்கு காவல்துறையின் அனுமதியும் வேண்டும் என்பது புரிகின்றது, நாளை சிக்கலென்றால் அவர்கள்தான் பொறுப்பு
பற்றி எறிந்த காலங்களை மறுபடியும் நினைவுபடுத்தும் கதை அது, இன்னும் கணல் ஓயவில்லை எனும்பொழுது ஒரு எச்சரிக்கை கண்டிப்பாக தேவை
வருமுன் காப்பது நல்லது….
கமலஹாசன் இப்படி படமெடுத்திருந்தால் கிருஷ்ணசாமி போன்ற சமூக பொறுப்பாளர்கள், திருமா கோஷ்டி விடாது
அவர் எடுக்கவில்லை என்பதால் யாரும் எந்த கதையும் எடுக்கலாம், சமூக பொறுப்பானவர்கள் இதில் எல்லாம் விடுமுறை எடுத்துவிடுவார்கள்..
நாமும் ஊரில் இருந்தால் இது பெரும் பிரளய கதை, எங்களுக்கு காட்டி அனுமதி வாங்கிய பின்புதான் வெளியிடவேண்டும் என 10 பேரை அழைத்து சென்று முதல்காட்சிக்கு முந்தைய காட்சியினை இலவசமாக, முடிந்தால் அவர்கள் காசிலே ஸ்நாக்ஸோடு பார்த்திருக்கலாம்…
அதற்கெல்லாம் ஒரு யோகம் வேண்டும்…