வயிற்றுபசிக்கும் மூட்டுபசிக்கும் உள்ள வித்தியாசம் அதுதான்

டிரம்ப் என்பவர் சீனா, ஈரான் ,வெனிசுலா என வம்பிழுப்பதில் ஒருவர் மனம் உடைந்துவிட்டார். என்ன இது? இவர் நம்மை கண்டுகொள்வதே இல்லை என கடந்த இரு மாதமாக தவித்து வந்தார்

அவர் வடகொரிய வெள்ளை தக்காளி கிம்.

அடிக்கடி “அய்யா டிரம்ப் எசமான் என்னை நினைவிருகின்றதா?” என கேட்டுபார்த்தார். “பொறுய்யா சும்மா தொண தொணன்னுட்டு” என விரட்டிவிட்டார் டிரம்ப்

பொருளாதார தடை இன்னும் ஏகபட்ட சிக்கலில் இருக்கும் வடகொரியா அமெரிக்காவினை பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் பலனில்லை

வயிற்றுபசிக்கும் மூட்டுபசிக்கும் உள்ள வித்தியாசம் அதுதான்

இப்படிபட்ட நிலையில் அமெரிக்கா என்ன செய்தால் பேச்சுவார்த்தைக்கு வரும் என்பதை உணர்ந்த வடகொரியா அதை செய்துவிட்டது

டிரம்ப் வேலைக்காக மாட்டார் என புரிந்த வடகொரியா கொட்டாவி விட்டபடியே ஏவுகனை சோதனையினை நடத்திவிட்டது

இரு ஏவுகனைகளை ஜப்பானை நோக்கி ஏவி சோதித்திருக்கின்றது வடகொரியா

அமெரிக்காவில் இப்பொழுது இரவு என்பதால் டிரம்ப் தூங்கிகொண்டிருப்பார், இனி காலை எழுந்ததும் வழக்கம் போல எப்படி சீறுவார் என்பதை பார்க்கலாம்