வரலாற்றை புரட்டுங்கள் உங்களுக்கு தானாக தெரியும்
இந்தியா பாகிஸ்தான் பிரிக்கபட வேண்டுமா என அன்று வாக்கெடுப்பு நடத்தபடவில்லை, மக்களிடம் ஏதும் கேட்கவில்லை
போர்ச்சுகீசிய, பிரெஞ்ச் பகுதிகள் யாருடன் இருக்கவேண்டுமென வாக்கெடுப்பு நடத்தபடவில்லை
ஐதரபாத் சமஸ்தானத்தினை போரில் பட்டேல் இணைத்தார், யாரிடமும் ஒரு கருத்தும் கேட்கவில்லை
இந்திரா அதற்கும் மேல் அந்த சிக்கிமை இணைக்கும்பொழுதுகூட ஒரு வார்த்தை அவர்களிடம் கேட்கவில்லை
பொற்கோவில் சம்பவத்தின் பொழுது பஞ்சாபியரிடம் ஒருவார்த்தை கேட்டாரா?
இந்த வங்கப்போர் குறித்து வங்காளிடம் என்று கருத்து கேட்கபட்டது?
கச்சதீவினை கொடுக்கும் போது ஒரு வார்த்தை சொன்னாரா? தமிழரிடம் கேட்டாரா?
ஈழபோராளிகளை இங்கு அழைத்துவரும் பொழுது கருத்து கேட்டார்களா? இல்லை இந்திய ராணுவம் அங்கு செல்லும் பொழுதுதான் கேட்டார்களா?
ஏன் கேட்கவில்லை
மக்களிடம் கேட்டால் குழப்பமே மிஞ்சும், அதில் பல சக்திகள் ஊடுருவும் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்
இதனால்தான் மகா முக்கியமான விவகாரங்களில் அரசுகள் மக்களின் முடிவுகளை கேட்பதில்லை
அரசுகள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தும் நேரம் உண்டு, ராணுவத்தையும் காவல்துறையினையும் பயன்படுத்தும் காலம் உண்டு
அதனால் எல்லா அரசுகளும் இதற்கு முன் என்ன செய்ததோ அதைத்தான் பாஜக அரசும் செய்தது
அதை பாசிசம் என்றோ அராஜகம் என்றோ சொல்ல ஒன்றுமே இல்லை
வரலாற்றை புரட்டுங்கள் உங்களுக்கு தானாக தெரியும்