வருடா வருடம் சுஜாதா விருது வழங்கும் மனுஷ்

சுஜாதா ஆதிக்கசாதி இந்துத்வ எழுத்தாளர் என திமுகவின் அடிமைகள் பல பொங்குகின்றன‌

ஆனால் அவை திமுகவின் ஆஸ்தான இம்சை கவிஞன் மனுஷ் கொண்டாடும் சுஜாதாவினை, ஆம் வருடா வருடம் சுஜாதா விருது வழங்கும் மனுஷ் என்பவரை பற்றி சத்தமே இல்லை

மனுஷ் என்பவர் தன்னை உருவாக்கியது சுஜாதா என பல இடங்களில் சொல்லியிருக்கின்றார், தன்னை பின்னாளில் காத்தது திமுக ஆனால் உருவாக்கியது சுஜாதா என்பதே அவரின் வாக்குமூலம்

ஆக திமுக உபிக்கள் என்ன திட்டத்தில் இருக்கின்றார்கள் என்பது புரிகின்றதா?

மனுஷ் என்பவரை மண்டையில் போட்டு கட்சியினை விட்டே விரட்டும் முடிவில் சுஜாதாவினை சீண்டுகின்றார்கள்

யாராவது எதைபற்றியாவது மூச் விட்டாலே காஷ்மீர் டூ கன்னியாகுமரி நீளத்துக்கு எழுதி தள்ளும் மனுஷ் என்பவரை, தன் குருநாதர் சுஜாதாவினை திமுக இம்சைகள் கிழிக்கும்பொழுது காணவே இல்லை

ஏம்ப்பா மனுஷ், நீ மனுசனா இல்லையா? கொஞ்சமாவது நன்றி இருக்கின்றதா?

உன் குருநாதர் பெயருக்கு களங்கம் வரும்பொழுது துடித்தெழ வேண்டாமா?

மானம் தான் சுத்தமாக உமக்கு இல்லை, நன்றியுமா இல்லை?