வருத்தம் தெரிவித்த சீமான்
நடிகர் ராகவா லாரன்ஸ் சர்ச்சை: வருத்தம் தெரிவித்த சீமான்
அதாவது தும்பிகள் லாரன்ஸை தொடர்ந்து வம்பிழுக்க, லாரன்ஸ் தானும் அரசியலுக்கு வரவா? சைமன் தயாரா என கேட்டுவிட்டார்
லாரன்ஸ் தன் அடுத்தபடமான ” காஞ்சனா 3″ படத்திற்கும் அதன் விளம்பரத்திற்கும் தும்பிகளைத்தான் நம்பி இருக்கின்றார் என்பதை உணர்ந்த சைமன் அவசரமாக வருத்தம் தெரிவித்துவிட்டார்
ஏண்டா தும்பிகளா?
லாரன்ஸுக்கு கூடவா உங்கள் அண்ணன் அஞ்சுவார்?
“டேய் இந்த ஓவியா , டாப்சி, லெட்சுமிராய் கூட ஆடிட்டு இந்த பக்கம் வராத, இது நெருப்பு எரிச்சுருவோம்.. ” என சொல்ல கூடவா அங்கிளுக்கு தைரியமில்லை?
இவர் கச்சதீவை மீட்டு, இலங்கையினை வெட்டி, டெல்லியினை பொளந்து…..
என்னமோ போங்கடா…..
அங்கிள் என்ன சொல்லி மன்னிப்பு கேட்டிருகின்றார் தெரியுமா? கவனியுங்கள்
“லாரன்ஸ் ஊனமுற்றோருக்கும் மனநோயாளிகளுக்கும் செய்துவரும் சேவையினை பாராட்டுகின்றேன்”
பின்ன, மனநோயாளிகளை பராமரிப்பது சாதரண விஷயமா?
“நாம் தமிழர்” என கட்சி நடத்தி மனநோயாளிகள் பலரை கட்டிமேய்க்கும் சைமனுக்கு அந்த சிரமம் தெரியாதா என்ன?
