வருந்தி அழைத்தாலும் வரவும் வராது

“பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார்,
மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா,
விதையாமை நாறுவ வித்து உள; மேதைக்கு
உரையாமைச் செல்லும் உணர்வு”

அதாவது பூக்காமலே காய்க்கும் சில மரங்கள் உண்டு பலா மரங்கள் போன்றவை அந்த ரகம், அப்படி சில அறிவாளிகள் வயதால் இளையவராலும் மூத்தவர்களுக்கு சமமாக அறியபடுவர்

பாத்திகட்டி கவனமாக வளர்க்கபடும் செடிகளை விட, தானாக முளைத்து வந்து அதிகபலன் கொடுக்கும் செடிகளும் உண்டு

அப்படி ஒரு சிலருக்கு பிறவியிலே மகா அறிவு உண்டு , யாரும் போதிக்காமலே அது அவர்களுக்கு அமைந்துவிடும்

இந்த பாடலுக்கு ஒருவரை சொல்லமுடியுமென்றால் நாம் கண்ட மிகபெரும் உதாரணம் கலைஞர் கருணாநிதி.

“வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமி(ன்) என்றால் போகா – இருந்தேங்கி நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து துஞ்சுவதே மாந்தர் தொழில்”

இந்த பாடலுக்கு மிகபெரும் உதாரணம் அவர் மகன் முக ஸ்டாலின், அவருக்கு வருந்தி அழைத்தாலும் பல விஷயங்கள் வராமாட்டேன் என்கின்றது, வரவும் வராது