வல்லரசு என்றால் அப்படித்தான்

Image may contain: ocean, sky, outdoor, water and nature

உலகெல்லாம் ஏராளமான ராணுவ முகாம்களை வைத்திருக்கும் நாடு அமெரிக்கா, இந்திய அமைதிபடை சென்றிராவிட்டால் இந்நேரம் இலங்கையில் கூட அமெரிக்க முகாம் அமைந்திருக்கும்

அப்படிபட்ட பெரும் படைகளின் பலத்தை காட்டும் விதமாக அமெரிக்க கப்பல்கள் சுற்றிகொண்டே இருக்கும், அவ்வப்போது கரைக்கும் வரும்

வல்லரசு என்றால் அப்படித்தான்

இப்பொழுது முதல் முறையாக தன் மிதக்கும் மருத்துவமனையினை உலகம் சுற்ற அனுப்பி இருக்கின்றது அமெரிக்கா. இது யுத்த கப்பல் அல்ல மாறாக காயம்பட்டவர்களுக்கு அவசர சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை கப்பல்

ஒரே நேரத்தில் சில ஆயிரம் பேர்களுக்கு சகல சிகிச்சையும் அளிக்கும் அளவு சக்தி கொண்ட மருத்துவமனை அது

இது யுத்த பணிக்கு மட்டுமன்றி இயற்கை பேரிடர்களின் அவசர பணிக்கும் பயன்படும் என்கின்றது அமெரிக்கா

நாங்கள் எப்படிபட்ட விஷயங்களை எல்லாம் வைத்திருக்கின்றோம் என காட்டுவதில் அவர்களுக்கொரு ஆனந்தம், இப்பொழுது அந்த கப்பல் இலங்கை திரிகோணமலை பக்கம் வந்திருக்கின்றது

யுத்தம் நடக்கும்பொழுது ஏன் வரவில்லை? வந்து பல்லாயிரம் மக்களை அது ஏன் காப்பாற்றவில்லை என்றேல்லாம் கேட்க கூடாது, அது அப்பொழுது வராது ஏன் என்றால் அப்படித்தான்

நிச்சயம் கப்பல் வரும்பொழுது கலைஞர் தடுத்திருக்க முடியாது.

மாபெரும் மருத்துமனையினை மிதக்கவிட்டு மவுன சிரிப்பு சிரிக்கின்றது அமெரிக்கா

பல நாடுகள் அதை ஒருமாதிரி பார்த்துகொண்டிருக்கின்றன

எல்லா வசதியும் கொண்ட மிதக்கும் மருத்துவமனை அது, இங்கோ உலக தர அப்பல்லோவில் கூட ஜெயாவின் ரத்த மாதிரியினை சேமிக்க இடமில்லையாம் பாவம் பரிதாபம்